டிராகன் பட இயக்குனர் மீது சிம்பு வைத்த நம்பிக்கை : ஆச்சரியத்தில் கோலிவுட்

0
78

‘டிராகன்’ இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவுக்கு அப்படியான அட்வான்ஸ் வாய்ப்பைக் கொடுத்துள்ளார் சிலம்பரசன்.

‘டிராகன்’ படம் வெளிவருவதற்கு முன்பே அஷ்வத்தின் திறமையை அறிந்து தனது 51வது படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார். சிம்பு நம்பியதைப் போலவே ‘டிராகன்’ படமும் பெரும் வெற்றி பெற்று 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.

இதனால், சிம்பு – அஷ்வத் மாரிமுத்து இணையும் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ‘ஓ மை கடவுளே, டிராகன்’ என அடுத்து சிம்புவின் 51வது படத்தையும் வெற்றிகரமாகக் கொடுத்து அஷ்வத் ஹாட்ரிக் வெற்றி பெறுவார் என திரையுலகினரும் எதிர்பார்க்கிறார்கள்.

பெயரிடப்படாத சிம்புவின் 51வது அந்த படம் எந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்படும் எனவும் அடுத்த ஆண்டு படம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகர்கள் வெற்றி பெறும் இளம் இயக்குனர்கள் மீது தான் நம்பிக்கை வைக்கிறார்கள். அவர்களை தான் தங்களுடைய அடுத்த படத்திற்கு இயக்குனர்களாக நியமிக்கிறார்கள் என்ற வழக்கம் கோலிவுட் வட்டாரத்தில் நீண்ட காலமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here