சன் டிவியில் பிரபல சீரியலாக இருக்கும் “சுந்தரி” மெகா தொடர் மக்களின் மனம் கவர்ந்த தொடர்களில் ஒன்றாக உள்ளது. இதில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களையும் மக்கள் தன் வீட்டு பெண்ணாக பாவித்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த சீரியலில் நடிக்கும் நடிகை ஒருவரை இன்று காவல்துறை கைது செய்துள்ளது. அது குறித்து கீழே விரிவாக காணலாம்.

அதாவது, சுந்தரி தொடரில் துணை நடிகையாக நடிக்கும் “மீனா” என்பவர், சில வருடங்களுக்கு முன் வெளியான “டெடி” படத்திலும் நடித்துள்ளார். தற்போது இவரிடம் இருந்து 5கிராம் மெத்தபெட்டமைன் எனும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும், இந்த போதைப் பொருட்கள் வழக்கில் டைசன் என்கின்ற இளைஞர் இளைஞர் உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சுந்தரி சீரியலில் நடிக்கும் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்தி இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here