இந்தியத் தேசிய விருது பெற்ற இயக்குநர்களான திரு பார்த்திபன் மற்றும் வசந்த பாலன் சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்து சிறப்பித்தனர்
மெய் எனும் பெயரில் திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கடந்த 2 வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வருகின்றது.

மாதந்தோறும் நடந்து கொண்டிருக்கும் இந்த திரைப்பட திருவிழாவினை அதன் நிர்வாக இயக்குநரான திரு. எஸ். ஜெயசீலன் அவர்கள் மற்றும் P.அன்பழகன் தொலை நோக்குப்பார்வையுடன் வழிநடத்தி வருகின்றார்கள்.

மெய் சர்வதேச திரைப்பட திரையிடல் குழு மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழகம் ஒன்றிணைந்து ஜூலை 19 அன்று நடத்திய பிரமாண்ட திரைப்பட விழாவில், மாணவர்கள் முன்னிலையில் திரைப்பிரபலங்கள் பங்கேற்று, தகுதியுள்ள படைப்புகளைத் தேர்வு செய்து, படைப்பாளிகளுக்கு விருது கொடுக்கப்பட்டது.

இவ்விழாவில் தேசிய விருது பெற்ற இயக்குநர்களான திரு பார்த்திபன், வசந்த பாலன் ஆகியோர் வருகை தந்து படைப்பாளிகளுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தனர். வேல்ஸ் குழுமத்தின் தலைவர் மதிப்பிற்குரிய Dr திரு ஐசரி கே கணேஷ், Dr. ஏ. ஜோதி முருகன் இந்த திரையிடலில் வேல்ஸ் குழுமத்தின் பங்கிடல் அதிகம். வேல்ஸ் குழுமத்தின் தலைவர் மதிப்பிற்குரிய Dr திரு ஐசரி கே கணேஷ், Dr. ஏ. ஜோதி முருகன் Pro Chancellor – VISTAS, LL Pro – Chancellor Academics, Vice President of Vels Educational group, Dr. S. ஸ்ரீமன் நாராயணன் Vice chancellor, Dr. M. பாஸ்கரன் Pro – Vice Chancellor, Dr. பி. சரவணன் – Registrar – VISTAS, Dr. S. வளர்மதி – விஷுவல் கம்யூனிகேஷன் துறைத் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களான திரு. S. மனோஜ் பிரபாகர் & Dr. செந்தில் குமார். உள்ளிட்டோர் இந்த திரையிடலில் மிகப்பெரிய பங்களித்துள்ளனர்.

மெய் குழு சிறப்பான தமிழ்த் திரைப்படைப்புகளை கண்டறிந்து அவர்களை அங்கீகரிப்பதன் நோக்கமாகவே இந்த விருது வழங்கும் விழா துவங்கி நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு இன்றைய நிகழ்வில் கூழாங்கல் திரைப்படம் திரையிடப்பட்டது மிக முக்கிய நிகழ்வாக இருந்தது.


இன்றைய நிகழ்வில் விருதுகளை பெற்றவர்கள்:
- P S வினோத் ராஜ் – கூழாங்கல் – சிறந்த இயக்குனர்
- ரா. வெங்கட் – சிறந்த திரைப்படம் – கிடா
- கார்த்திகா வைத்தியநாதன் – சிறந்த பாடகி – சித்தா (கண்கள் ஏதோ). –
- தர்ஷன் – சிறந்த வில்லன் – சித்தா.
- மகேந்திரன் கனேசன் – யாத்திசை – சிறந்த படத்தொகுப்பாளர்
- இரஞ்சித் குமார் – சிறந்த கலை இயக்குனர் – யாத்திசை
- மதன் – சிறந்த குணச்சித்திர நடிகர் – ரணம் அறம் தவறேல்
- அம்மு அபிராமி – சிறந்த நடிகை – கண்ணகி
- சேத்தன் – சிறந்த நடிகர் – விடுதலை பாகம் 1
- பாக்கியம் ஷங்கர் – சிறந்த நடிகர் – துணைக்கதாப்பாத்திரம் மாடர்ன் லவ் சென்னை.
- பிருத்வீராஜன் – சிறந்த குணச்சித்திர நடிகர் – புளூ ஸ்டார்
- தமிழ் அழகன் – சிறந்த ஒளிப்பதிவாளர் – புளூ ஸ்டார்
- Lights on Media – பருந்தாகுது ஊர்க்குருவி – சிறந்த தயாரிப்பாளர் –
- செல்வா – பிதா – சிறந்த போஸ்டர் வடிவமைப்பாளர்

இந்நிகழ்வில் பங்கேற்று விருது வழங்கிய இயக்குநர் பார்த்திபன் பேசியதாவது…
மெய்யாலுமே சினிமாவில் இருப்பது தான் என் மகிழ்ச்சி அந்த வகையில் மெய் நடத்தும் இந்த விழாவில் பங்கேற்று கொண்டது சந்தோஷம். விருது என்பது முத்தம் கொடுப்பது போல விருது வழங்குவதும், பெறுவதும் மகிழ்ச்சி தான். விருது பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள். என் முன்னால் உள்ள V வெற்றியைக் குறிக்கும், வசந்த பாலனைக்குறிக்கும் மற்றும் வேல்ஸ் குழுமத்தைக் குறிக்கும். திரைப்படத்தை எல்லோரிடமும் கொண்டு சேர்க்கும் மெய் குழுவின் உழைப்பிற்கும், இதற்கு பெரும் உறுதுணையாக நிற்கும் வேல்ஸ் பல்கலைகழகத்திற்கும் என் வாழ்த்துக்கள். விருது வாங்கிய எல்லா படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

இயக்குநர் வசந்தபாலன் பேசியதாவது…
மெய் குழுவினர் தமிழ் திரைப்படைப்பாளிகளுக்கு விருது வழங்குவது சந்தோசம். கூழாங்கல், ப்ளூஸ்டார், கலைஞர்கள் எனக் கடந்த வருடம் நான் நேசித்த அனைவருக்கும் தேடித் தேடி விருது வழங்கி இருப்பது மிக்க மகிழ்ச்சி. இந்த விருது மிகப்பெரிய அங்கீகாரம் அது தான் படைப்பாளிகள் தொடர்ந்து முன்னேற ஊக்கமாக இருக்கிறது. வெயில் திரைப்படத்திற்குக் கிடைத்த விருதுகள் தான் என்னை ஓட வைத்தது. இந்த விருது விழாவை ஒருங்கிணைத்த மெய் குழுவினருக்கும் மற்றும் வேல்ஸ் பல்கலைகழகத்திற்கும் என் மனமார்ந்த நன்றி.



Here are some very low offer rated web hosting providers to consider: Click Here