ஆகஸ்ட் மாதத்தில் அதகளம் பண்ணவரும் நடிகர் பிரஷாந்த் ன் அந்தகன்

0
269

வெங்கட் பிரபு இயக்கி விஜய், பிரசாந்த் நடித்துள்ள ‘கோட்’ என்னும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம், வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு முன்பாகவே பிரசாந்த் கதாநாயகனாக நடித்த ‘அந்தகன்’ படம் திரைக்கு வருகிறது. சமீபத்தில் வெளியான போஸ்டரில், ‘அந்தகன்’ படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின் பிரசாந்துக்கு ஆகஸ்ட்டில் 2 படங்கள் திரைக்கு வருகிறது என்பதால், அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிரசாந்த இந்தியில் ஸ்ரீராம் ராகவன் டைரக்க்ஷனில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப் பில் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்த ‘அந்தாதுன்’ என்ற திரைப்படமே தமிழில் ‘அந்தகன்’ என்னும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை நடிகர் தியாகராஜன் திரைக்கதை எழுதி தயாரித்து இயக்கியுள்ளார். பட்டுக்கோட்டை பிரபாகர், ஸ்ரீராம் ராகவனின் கதைக்கு வசனம் எழுதியுள்ளார்.

இதில் முக்கிய வேடங்களில் கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக் கனி, ஊர்வசி, யோகி பாபு, கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார் மற்றும் மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்தும் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்தும் உள்ளனர். இப்படத்தை ஸ்டார் மூவிஸ் சார்பில் பிரீத்தி தியாகராஜன் வழங்க, சாந்தி தியாகராஜன் தயாரித்துள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here