கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் சிம்பு மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இருவருக்கும் இடையே வந்த பிரச்சனை பெரிய அளவில் சினிமா வட்டாரத்தில் சர்ச்சை ஏற்படுத்தியது.
எனக்கு ஒப்பந்தம் போட்டவாறு தனக்கு படம் நடித்து தராமல் சிம்பு தக் லைப் போன்ற மற்ற படங்களில் நடிக்க கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார் ஐசரி கணேஷ். அதனால் சிம்பு மீது ரெட் கார்டு போடப்பட போவதாக தகவல் பரவியது.
சிம்பு பதில்

இந்தியன் 2 படத்தில் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு பங்கேற்றார். அப்போது ரெட் கார்டு விவகாரம் குறித்தும் பேசி இருக்கிறார்.
ரெட் கார்டு விஷயம் வதந்தி தான். எங்களுக்கு இடையில் சில பிரச்சனைகள் இருந்தது. அதை பேசி முடித்துக்கொண்டோம் என கூறி இருக்கிறார்.
மேலும் வெளிப்படையாக பேசுவதால் பிரச்சனையை சந்திக்க போவதாகவும் அவர் தெறிவித்திருக்கிறார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here