Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

I.P.L கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் போன்று இனி P.P.L குதிரையேற்றம் போட்டிகளும் இருக்கும் என ஆக்டர் பிரசாந்த் கோவையில் பேட்டி..!

குதிரை விளையாட்டு போட்டிக்கான அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்பது தமிழனாக பெருமை கொள்வதாகவும் இதன் மூலம் நம்முடைய வரலாற்றை மீட்டு கொண்டு வருகிறோம் எனவும் இந்த ஆண்டு 2024"அந்தகன்…

குதிரை விளையாட்டு போட்டிக்கான அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்பது தமிழனாக பெருமை கொள்வதாகவும் இதன் மூலம் நம்முடைய வரலாற்றை மீட்டு கொண்டு வருகிறோம் எனவும் இந்த ஆண்டு 2024″அந்தகன் படமும் நடிகர் விஜயுடன் G.O.A.T படமும் திரைக்கு வருவது மகிழ்ச்சி..!

2026 அரசியல் களத்திற்கு என்னுடைய அரசியல் வருகை பற்றி சொல்ல காலம் இருக்கிறது.இருந்தும் மக்களுக்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களுக்கு என் ஆதரவு உண்டு என நடிகர் பிரசாந்த் தெரிவிப்பு..! கோவை நவ-இந்தியாவில் நட்சத்திர உணவகத்தில் PPL குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் மற்றும் அதன் லோகோ அறிமுகம் பற்றிய செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் பிரசாந்த், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பங்கேற்று PPL குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் அதன் லோகோவை வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து நடிகர் பிரசாந்த செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் அப்போது அவர் பேசியதாவது. ஹிஸ்டரி மேக்கிங் என்று தான் நான் சொல்லுவேன். குதிரை ஏற்றம் விளையாட்டு மூலம் அதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தி வருகிறோம்.

கிரிக்கெட்டில் ஐ.பி.எல் போல இனி பி.பி.எல் இருக்கும் என்றும் எளிய மக்களும் குதிரை ஏற்றம் போன்றவை இருக்க வேண்டும். எனக்கு சிறு வயதில் இருந்து குதிரை விளையாட்டு பிடிக்கும். என்னுடைய படங்களிலும் குதிரைகளை காட்சிகளை கொண்டு வந்து விடுவேன். எனக்கு பிடித்த விலங்கு குதிரை. ஷூட்டிங்கின் போது குதிரையில் பயணம் செய்த நிகழ்வுகளை பகிர்ந்தார். தமிழர்கள் ஒரு செயலை செய்யும் போது அந்த செயலை ஆதரிக்க வேண்டும்.

Advertisements

அந்தகன் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. அந்தகன் படத்தில் எல்லா விதமான பிரசாந்தை பார்க்கலாம்.அந்தகன் படத்தில் நடித்தவர்கள் அனைவருக்கும் நன்றிகளை கூறிக்கொள்கிறேன். GOAT படம் பண்றது காரணமாக 3 பேருக்கு நன்றி தெரிவித்துள்ளேன். கடந்த காலங்களில் மல்டி ஸ்டார் படம் செய்து இருக்கிறேன். தமிழ் சினிமாவில் ஆரோக்கியமாக போட்டி இருப்பது நல்லது என் மீது அன்பு வைத்துள்ள ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும்

குதிரை யார் வேண்டுமானால் ஒட்டல்லாம் ஆனால் போலோ விளையாட்டு அப்படி இல்லை பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். நல்ல கதை களம் இருந்தால் முழு நேர காமெடி படம் பண்ண தயார். போலோ இப்போது தான் அமைகிறது சீக்கிரம் பார்ப்பீர்கள். அப்பா திறமையான இயக்குநர் டெக்னாலஜி பயின்று அதை படத்தில் பயன்படுத்தியுள்ளார். செலபரிட்டி போலோ நடந்தால் நான் தான் அதில் கேப்டன் ஒரு படம் எல்லாருக்கும் பிடிக்கவேணும் என்பது இல்லை அது அவர்களின் கருத்து. கருத்து யார் வேண்டுமானாலும் சொல்லலாம் –

2026 தேர்தல் களத்தில் மக்களுக்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களுக்கு நான் ஆதரவளிப்பேன் என தெரிவித்தார். தொடர்ந்து ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வரும் நடிகர் பிரசாந்தின் அந்தகன் திரைப்படத்தின் டிரைலர் ரிலீசானது என்பது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here