ஓடிடி-க்கு வரும் விடாமுயற்சி : இவ்வளவு சீக்கிரமா வர என்ன காரணம்?

0
126

நடிகர் அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான படம் ‘விடாமுயற்சி’. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

மகிழ் திருமேனி இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இருப்பினும், இப்படம் இப்படம் கலவையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இப்படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகர் அஜித்குமார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் முதல் நாளில் மட்டும் ரூ.34 கோடி வசூல் செய்துள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.  விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் உலக அளவில் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற மார்ச் மாதம் முதல் வாரத்தில் “நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி” தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. விடாமுயற்சி படம் ஓ.டி.டி தளத்திலும் லட்சக்கணக்கான ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here