இந்தியன்- 3 படம் நெட்ஃப்லிக்ஸ் ஓடிடியில் விரைவில் வெளியாகிறது.
இந்தியன்-1 படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான், சங்கர், சுஜாதா, வாலி என இவர்களின் கூட்டணியில் இப்படம் உருவானது. இப்படத்தில் கமல் அவர்கள் போட்ட ‘இந்தியன் தாத்தா’ கெட்அப் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து, இந்தாண்டு “இந்தியன்-2” படம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. திரைப்படம் ஓடிடி-யில் வெளியானப்பிறகு உலமம் முழுவது உள்ள மக்கள் படத்தை ட்ரோல் செய்ய தொடங்கினர்.
சமூக வலைத்தள நெட்டிசன்கள் இந்த படத்தை கிண்டல் செய்து, மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியன் தாத்தா தோற்றம் முதல், பிரியா பவானி சங்கர் நடிப்பு, ஷங்கர் இயக்கம் வரை இணையத்தில் கலாய்த்தி தள்ளினர். இதனால் இந்தியன் -3 திரைப்படம் திரையரங்க்குகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளரான லைகா நிறுவனம் இந்தியன் 2 படத்தின் தோல்வியை அடுத்து இந்தியன் 3 படத்திற்கு மக்களிடம் பெரிதும் எதிர்ப்பார்ப்பு இல்லை என்பதால் திரைப்படத்தை நேரடியாக ஓடிடி தளமான நெட்ஃப்லிக்ஸ் வெளியிட பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதுக்குறித்து இணையத்தில் இந்த செய்தி வேகமாக பரவி வருகிறது. இதுக்குறித்த எந்த அதிகாரப்பூர்வத் தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here