குக்கூ பட நடிகருக்கு இப்படி ஒரு நிலைமையா..? கண்ணீர் மல்க பேசும் வீடியோ..

0
113

Is this a situation for the Cuckoo movie actor : ஜோக்கர் படத்தை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் 2014 ஆம் வருடம் வெளியான திரைப்படம் குக்கூ. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், மாளவிகா நாயர், நந்தினி, சோமசுந்தரம், ஆடுகளம் முருகதாஸ், இளங்கோ மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை, அவர்கள் அன்றாடம் சந்திக்கும் இன்னல்கள், பார்வையற்றோரின் வாழ்வாதாரம் என அவர்களின் வாழ்க்கையை கருவாக வைத்து எதார்த்த கதைக்களத்தோடு தயாரான படம்தான் குக்கூ.

Is this a situation for the Cuckoo movie actor

இந்த படத்தில் கண்பார்வையற்ற அட்டகத்தி தினேஷுக்கும், மாளவிகா நாயர் இவர்களுக்கு இடையே உண்டாகும் காதல். அவர்களின் காதல் உணர்வு, இருவருக்குமான உலகம் என அழகாக காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குனர்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருப்பார். அவரது இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பை பெற்றது.

படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது, பார்வையற்றோர்களின் வாழ்க்கையை பலரும் உணரக்கூடிய வகையில் படம் அமைந்திருந்தது. விமர்சன ரீதியாக படம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் பார்வையற்ற அட்டகத்தி தினேஷின் நண்பனாக இளங்கோவன் படம் முழுவதும் உடன் பயணித்திருப்பார். படத்தில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் இவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி.

இளங்கோவின் கதாபாத்திரம் படத்தில் பேசப்படும் கதாபாத்திரமாக அமைந்து இருந்தது. 2014 ஆம் வருடம் படம் வெளியானதற்கு பிறகு இளங்கோ என்னவானார் என்பது குறித்து பலருக்கும் தெரியாமலே இருந்தது. இந்த நிலையில், அவர் சென்னையில் உள்ள பிளாட்பாரம் ஒன்றில் பாட்டு பாடி பிச்சையெடுத்து வருவதாக தகவல் வெளியானது.

இதையடுத்து குக்கூ இளங்கோவன் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில், 2019 ஆம் வருடம் வீட்டில் கண்பார்வை இல்லாமல் தண்டச்சோறு சாப்பிடுவதாக சொல்லி தனது தாயே தன்னை வீட்டை விட்டு துரத்தியதாகவும், அதன் பிறகு அவர் சென்னை வந்துவிட்டதாகவும் கூறினார்.

கொரோனா காலகட்டத்தில் ஒரு வேலை உணவுக்கு கூட ரொம்பவும் கஷ்டப்பட்டதாகவும், உணவுக்கும் தங்கியிருந்த அரைக்கு கொடுக்க பணம் இல்லாததால், அந்த ரூமை விட்டு வெளியேறி பிளாட்பாரத்தில் தங்கி வருவதாகவும், பாடல் பாடி அதில் கிடைக்கும் காசில் சாப்பிட்டுவிட்டு அந்த இடத்திலேயே தாங்கிக்கொள்வதாகவும் கூறினார்.

மேலும் தனக்கு குக்கூ படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும், கண்பார்வை இல்லாததால் வெளியில் சென்றுதன்னால் பட வாய்ப்பு தேடவும் முடியவில்லை என்றும் கூறினார். கண்பார்வை இல்லாததால் பலரும் தன்னை அடிப்பார்கள் என்றும் பாடினால் கூட சண்டைக்கு வருவார்கள் என்றும் கண்ணீர் மல்க அவர் சொன்னது காண்போரின் இதயத்தை உலுக்கும் வண்ணம் இருந்தது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here