தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒரு மாநில மாநாடு, நான்கு மண்டல மாநாடு, பத்து பொதுக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..
நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை சென்ற பிப்ரவரி 2-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழக வெற்றிக்கழகம் என பெயர் சூட்டப்பட்டிருக்கும் அந்த அரசியல் கட்சியை, பதிவு செய்து தேர்தல் ஆணையத்தின் லிஸ்ட்ல் பதிவேற்றம் செய்யும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தன்னுடைய அரசியல் பயணத்தை துரிதப்படுத்த முடிவெடுத்து உள்ளார். அதற்கான திட்டங்களும் தீட்டப்பட்டு வருகின்றன.

விஜயின் அரசியல் கட்சியை இளைஞர்களையும் கடந்து பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும், அரசியல் வருகைக்கான காரணம் மற்றும் அவருடைய கொள்கை போன்ற விஷயங்களை மக்களிடம் விளக்கி சொல்ல பல திட்டங்கள் வகுக்கப்பட்டு இருக்கின்றன. அதில் கட்சி மாநாடு பல வகையில் நடத்த முடிவு செய்துள்ளனர். அதில் ஒரு மாநில மாநாடு, நான்கு மண்டல மாநாடுகள், பத்து மாவட்ட பொதுக்கூட்டங்கள் என்று வரிசையாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மாநாடுகள் மட்டுமன்றி மக்களை நேரடியாக சென்று சந்தித்து, தமிழகத்தில் ஏறத்தாழ 100 சட்டமன்றத் தொகுதிகளில் விஜய் நடைபயணம் மேற்கொள்ளவும் முடிவெடுத்து இருக்கின்றார். இந்த 100 தொகுதிகள் தமிழகத்தில் இருக்கும் வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களை ஒன்று சேர்க்கும் வகையில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
முதல் மாநாட்டை நடத்த சேலம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி போன்ற இடங்களில் ஏதேனும் ஒரு பகுதியில் நடத்த ஆலோசித்துள்ளனர். அதில் இறுதியாக திருச்சியை தேர்வு செய்து இருப்பதாக நமக்கு செய்தி கிடைத்திருக்கிறது. தமிழகத்தின் மத்திய பகுதி திருச்சி என்பதால், சென்னையில் இருந்தும், கன்னியாகுமரி, வேலூர், கோவை, ஓசூர், நாகப்பட்டனம் என அனைத்து இடங்களில் இருந்தும் 6 – 7 மணி நேரத்திற்குள் திருச்சியை சென்று அடைந்து விடலாம்.
எனவே, கட்சி தொண்டர்கள் மாநாட்டிற்கு வருவது சுலபமாக இருக்கும் என்ற வகையிலும் அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. அரசியல் கட்சியை ஆரம்பித்த விஜய் எதுவும் பேசாமல் இருக்கிறார், அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தி பேசவில்லை என்றெல்லாம் விமர்சனங்கள் கிளம்பி வந்தன. இந்த நிலையில்தான், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கும் விழாவில் நீட் பற்றி பேசி இருந்தார். அவருடைய பேசியது பெரும் விவாதமானது. இந்த நிலையில் கட்சியின் கொடியை சீக்கிரமே அறிமுகப்படுத்த உள்ளனர்.
அதுவும் கட்சியின் பெயர் தேர்தல் ஆணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட உடன், கட்சிக்கொடி அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன் பின் மாநாட்டில் தன்னுடைய நிலைப்பாடுகள் என்ன என்பதை பற்றிய பல விஷயங்களை பேச இருக்கிறார் விஜய். சினிமாவிலிருந்து விலகும் விஜய், அரசியலில் அதிதீவிர கவனம் செலுத்துவதற்கு இந்த மாநாடு மற்றும் நடைபயணம் போன்றவற்றை திட்டமிட்டு இருக்கிறார். அது அவருக்கு எந்த அளவுக்கு பலனை கொடுக்கப்போகிறது என்பதை பற்றி பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here