மறைந்த நடிகர் ரோபோ சங்கருக்காக ரீ- ரிலீஸ் ஆக இருக்கும் நடிகர் கமலின் “நாயகன்” திரைப்படத்திற்கான டிக்கெட் ஒதுக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு, அது இது எது என பல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது நகைச்சுவை திறமையால் அனைவரையும் சிரிக்க வைத்தவர் ரோபோ சங்கர். அதனைத் தொடர்ந்து வெள்ளி திரையிலும் அஜித்,விஜய், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்த அவர் உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார். அவரது மறைவு அவரின் குடும்பத்தினரை மட்டுமின்றி அனைவரையும் கலங்க வைத்தது.
இந்த நிலையில் நடிகர் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ சங்கருக்கு கமலின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை திரையரங்கில் ரீ- ரிலீஸ் ஆக இருக்கும் “நாயகன்” திரைப்படத்திற்கான டிக்கெட் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த ரோபோ சங்கரின் குடும்பத்தினர் கண்ணீருடன் அவர் தற்போது இருந்திருந்தால் நாயகன் படத்தின் ரிலீஸை திருவிழா போல் கொண்டாடி இருப்பார் என வருத்தத்துடன் தெரிவித்திருக்கின்றனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here


