“தக் லைஃப்” படத்தில் தனது கதாபாத்திரம் குறித்த ரசிகர்களின் கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் பளீச் என பதிலளித்துள்ளார்.
சென்னையில் ‘ஃபிக்கி (FICCI) ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வணிக மாநாடு (MEBC)–சவுத் கனெக்ட் 2025’-ஐ தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகரும் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுடன் இணைந்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் FICCI ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (தெற்கு) அமைப்பின் தலைவராக கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியில் கமல் – த்ரிஷா இணைந்து கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். அப்போது “ரங்கராஜ சக்திவேல் நாயக்கர், நல்லவரா கெட்டவரா?” என்று கமலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் நல்லதும் கெட்டதும் சேர்ந்தவர் தான்” என்று பதிலளித்தார்.
மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படத்தில் ரங்கராஜ சக்திவேல் நாயக்கர் கதாபாத்திரத்தில் கமல் நடித்துள்ளார். இதில் சிம்பு, த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் கமலுடன் நடித்துள்ளனர். ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளன.
“தக் லைஃப்” படம் வரும் ஜூன் மாதம் 5ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here


