அரசியல் அறிவிப்புக்கு பிறகு முதல் முறையாக தாய், தந்தையை சந்தித்த விஜய்: அப்பா எஸ்.ஏ.சி மகிழ்ச்சி.!

0
157

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் விஜய் தற்போது அரசியல்வாதியாகவும் மாறி இருக்கிறார். சமீபத்தில் தனது அரசியல் நுழைவு குறித்து அதிகாரப்பூர்வ அறிவித்தவர், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் கட்சியை துவங்கினார். இந்நிலையில் தனது அரசியல் கட்சி சம்மந்தமான அறிவிப்பிற்கு பின் முதல் முறையாக நடிகர் விஜய், தன்னுடைய பெற்றோரை சந்தித்திருக்கிறார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் கட்சி ஒன்றை துவங்கினார். ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்த பின், முழுவதுமாக சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளார். அதன்படி தற்போது நடித்து வரும் ‘கோட்’ படம் முடிந்தவுடன் அடுத்ததாக ‘தளபதி 69’ ல் நடித்தததை தொடர்ந்து விஜய், அரசியலில் முழுவதுமாக கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தனது அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பிற்கு பின் விஜய், தன்னுடைய பெற்றோரோடு இருக்கும் புகைப்படம் சோஷியல் மீடியாவில் தற்போது வேறலெவலில் டிரெண்டாகி வருகிறது. தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாயார் ஷோபாவுடன் ‘கோட்’ பட லுக்கில் விஜய் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

முன்னதாக விஜய் தனது பெற்றோரை சந்திப்பதில்லை. தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருடன் மனக்கசப்பான பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இது போன்ற சூழ்நிலையில் விஜய் தனது பெற்றோரை சந்தித்திருக்கிறார். இந்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்து ‘இன்று’ என குறிப்பிட்டுள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர். இதனிடையில் இன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு எல்லா தொகுதிகளிலும் இன்று அன்னதானம் செய்ய தனது கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார் விஜய்.

மேலும், கடந்தாண்டை போல இந்தாண்டும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கப்போகிறார். இதற்கான வேலைகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தற்போது ‘கோட்’ படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தீவிரமாக பங்கேற்று வருகிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தில் விஜய்யுடன் ஜெயராம், மோகன், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், வைபவ், விடிவி கணேஷ், பிரேம்ஜி அமரன் மற்றும் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி போன்ற ஏராளமானோர் இணைந்து நடித்து கொண்டிருக்கின்றனர். ‘கோட்’ படத்தினை வரும் செப்டம்பர் மாதம் வெளியிட போவதாக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here