படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்களுக்கு, நிச்சயம் ஒரு வலி மிகுந்த உணர்வைத் தரும்

0
157

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்கில் விடுதலை- பார்ட் 2 திரைப்படம் இன்றுவெளியானது.இத்திரைப்படத்தை பார்க்க வந்திருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், நடிகர் சூரி திரையரங்குக்கு வந்தார்.அவருக்கு தாரை, தப்பட்டைகள் முழங்க, சர வெடிகள் வைத்து ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதைத்தொடர்ந்து, நடிகர் சூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:விடுதலை- 2 திரைப்படம் கமர்சியலை தாண்டி, மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் இந்த படத்தில் இருக்கிறது.

விடுதலை- 2 படத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திரைப்படம் இருக்கும்.

சினிமா ரசிகர்கள் அனைவரும் விடுதலை -2 படத்தை பாருங்கள். இந்த படத்துக்கு மக்கள் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, விடுதலை-3 எடுப்பது குறித்து பார்ப்போம்.விடுதலை-2ல் வாத்தியார் யார் என்பது குறித்து விரிவாக இருக்கும். நானும் இந்த படத்தில் இருப்பேன்.

விடுதலை- 2 திரைப்படம் அனைவரின் வாழ்வோடு ஒன்றிணையக் கூடியதாக இருக்கும். படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்களுக்கு, நிச்சயம் ஒரு வலி மிகுந்த உணர்வைத் தரும்.

அடுத்தடுத்த படங்களில் கதை நாயகனாகவே பயணிப்பேன். நல்ல கதை அமைந்தால் சிவகார்த்திகேயனோடு மீண்டும் இணைந்து நடிப்பேன்.கதையை சிவகார்த்திகேயன் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் எனக்கு எப்பொழுதும் ஹீரோ என்னுடைய தம்பி சிவகார்த்திகேயன் தான்.

நடிகர் சூரி பேட்டி கொடுத்த போது, அங்கு திரண்டு இருந்த ரசிகர்கள், அவரை, “வருங்கால சூப்பர் ஸ்டார்” என்று கோஷம் எழுப்பினர்.

உடனே அவர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்ட நடிகர் சூரி, “அதெல்லாம் வேணாம் பா” என்றார்.இன்னும் சிலர் ஆர்வக்கோளாறினால், உணர்ச்சிவசப்பட்டு, “அடுத்த தளபதி” என்று கூவினார்கள்.அதைக்கேட்டு பதறிய சூரி, “ஐயோ சாமி எனக்கு இதுவே போதும்.. இப்படி இருந்தாலே போதும்” என்று மீண்டும் அவர்கள் கையெடுத்து கும்பிட்டார்.

மேலும், “கதை நாயகனாக, கதாநாயகனாக நடித்து விட்டீர்கள். அடுத்தது அரசியல்தானா? என்ற செய்தியாளர் கேள்விக்கு, “அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. இப்படியே இருந்துட்டா போதும்” என தெரிவித்தார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here