தமிழ் சினிமாவில் மறுபடியும் உருவாக போகிறது அம்மன் சாமி ட்ரெண்ட் மூவீக்கள். R.J. பாலாஜி எந்த நேரத்தில் மாசானி அம்மன் திரைப்படத்தை கையில் எடுத்தாரோ அடுத்தடுத்து பல படங்கள் கியூவில் வந்துள்ளது.
மூக்குத்தி அம்மன் படத்தின் 2 ம் பாகத்தை கையில் எடுத்தார் R.J.பாலாஜி. ஆனால் அந்த படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா அதிகமாக சம்பளம் கேட்டுள்ளார். படத்தின் பட்ஜெட்டே 10 கோடி தான் என சொன்னதால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பதற்கு பின் வாங்கி விட்டார்.

இப்பொழுது அந்த படத்தை கைவிட்டு மாசாணி அம்மன் என்னும் ஒரு புதிய படத்தை இயக்கி கொண்டிருக்கிறார் R.J.பாலாஜி. இந்த படத்தில் திரிஷா நடிப்பதற்கு ஒரு கணிசமான தொகையை கொடுத்து தயார் செய்து கொண்டிருக்கிறார். திரிஷாவும் மாசாணி அம்மன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் நயன்தாராவை வைத்து ஆர்.ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் 2 ம் பாகம் எடுத்தே தீர வேண்டும் என்ற முடிவில் தான் இருக்கிறார். அதற்கான நேரம் கூடி வரும் போது ஆரம்பிக்க திட்டமிட்டு இருக்கிறார். இப்பொழுது நயன்தாராவும், திரிஷாவும் அம்மன் கதாபாத்திரம் நடிக்க ரெடியாகி விட்டார்கள்.
இவர்களைப் போலவே தமிழ் சினிமாவை விட்டு காணாமல் சென்ற பிரபல நடிகையும் மீண்டும் அம்மன் வேடத்தில் நடிக்க ரெடியாகி விட்டார். கடைசியாக 2017 ஆம் வருடம் ஹரி இயக்கிய சிங்கம் 3 படத்தில் நடித்தவர் அனுஷ்கா செட்டி. மறுபடியும் தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் கொடுக்கிறார்
ஏற்கனவே இயக்குனர் A.L. விஜய் படத்தில் நடிப்பதாக கமிட்மெண்ட் பண்ணியிருந்த அனுஷ்கா செட்டி இப்பொழுது தமிழ் படம் ஒன்றில் அம்மன் வேடத்தில் நடிக்க போகிறாராம். சுந்தர் சி அவரை அரண்மனை படத்தில் நடிப்பதற்காக அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்க கேட்ட போது மறுப்பு தெரிவித்தாராம் அனுஷ்கா.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here