கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தாங்கள் பெற்றோராக இருப்பதை பாடலாசிரியர் சிநேகன் – நடிகை கன்னிகா ரவி அறிவித்தனர்.
இதையடுத்து கர்ப்பமாகி ஐந்து மாதம் ஆகியிருக்கும் நிலையில் கன்னிகா ரவிக்கு வளைகாப்பு நடந்துள்ளது. இதன் புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளபக்கத்தில் “வரப்போகும் எங்கள் வாரிசினை வரவேற்கும் 5ஆம் மாத வளையல் அணியும் விழா” என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
சிநேகன் அவர்களுக்கும், நடிகை கன்னிகா அவர்களும் நீண்டகாலமாக காதலித்து நடிகர் கமல்ஹாசன் தலைமையில் கல்யாணம் செய்து கொண்டவர்கள். சிநேகன் தற்போது சில திரைப்படங்களில் பாடல் எழுதி வருகிறார்கள். தமிழ் இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளிலும், பட்டிமன்றங்களிலும் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நடிகர் கமல்ஹாசன் அவர்களின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இலக்கிய அணி நிர்வாகியாக அவர் பொறுப்பு வகிக்கிறார். சிநேகன் பிக் பாஸ் சீசன் -1 போட்டியில் பங்கேற்று சர்ச்சைக்குரிய நாயகராக வெளியே வந்தார்.
எளிமையாக நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் சில திரைப்பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர். சினேகன் தான் அப்பாவாக போகிறேன் என்ற மகிழ்ச்சி செய்தியை சொன்ன சில வாரங்களிலே அவர் கதாநாயகனாக நடிக்கும் சீரியல் ப்ரோமோவும் வெளியாகி இருக்கிறது. கலைஞர் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பவித்ரா என்ற சீரியலில் தான் சினேகன் கதாநாயகனாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here