விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் பிரபலமான ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் தற்போது நடுவராக அசத்தி வருகிறார் மாதம்பட்டி ரங்கராஜ். தனது தந்தை தொடங்கிய தொழிலை தற்போது இவர் கார்ப்பரேட்டாக மாற்றி பன்மடங்கு பிரபலப்படுத்தி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் இன்று எந்த விஐபி வீட்டில் விருந்து நடந்தாலும் அங்கு இவருடைய கைவண்ணம் தான் மணக்கிறது. அந்தளவு விஐபிகளிடையே மாதம்பட்டி ரங்கராஜ் பிரபலம். நடிப்பின் மீதும் ஆர்வம் மிகுந்துள்ள இவர் தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ராஜூமுருகன் கதையில் உருவான மெஹந்தி சர்க்கஸ் படத்தின் ஹீரோ இவர்தான். அந்த படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதன்பின் 2020-ம் வருடம் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த பெண் குயின் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷின் கணவராக இவர் நடித்திருப்பார். தற்போது அறிமுக டைரக்டர் லதா இயக்கும் மிஸ் மேகி படத்தில் இவர் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இதுமட்டுமின்றி தற்போது விளம்பரத்தில் நடிப்பதற்கும் வாய்ப்புகள் இவரைத் தேடி வந்துள்ளது. அந்த வகையில் பிரபல சக்தி மசாலா விளம்பரத்தில் நடிகை அதிதி ஷங்கருடன் இணைந்து இவர் நடித்துள்ளார். இதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சந்தோசம் பொங்க மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here