“டெல்டா கிங்” மணல்மேடு சங்கரின் வாழ்க்கை வரலாறு : பா.ரஞ்சித்-யின் புதிய முயற்சியும், எதிர்ப்பும்

0
62


“கெத்து தினேஷ்” நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்திற்கு ‘வேட்டுவம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அர்த்தம் வேட்டையாடுதல்.
சிலர் ‘வெட்டுவோம்‘ எனவும் டைட்டிலை உச்சரித்து வருகிறார்கள்‌. இதுவும் சர்ச்சையாகி உள்ளது.

இது வேதாரண்யத்தில் உள்ள மணல்மேடு பகுதியை சேர்ந்த சங்கரின் வாழ்க்கை வரலாறு என கூறப்படுகிறது.

யார் இந்த மணல்மேடு சங்கர்:-

சங்கர் என்னும் இயற்பெயர் கொண்ட “மணல்மேடு சங்கர்” எஸ்/சி எனப்படும் பட்டியலின மக்களின் பாதுகாவலராக திகழ்ந்தார். அவர்களுக்காக உரிமைக்குரல் கொடுப்பது பட்டியலின மக்களுக்கு எதிராக பிற சமூகத்தினர், தாக்குதலில் ஈடுபட்டால் அவர்களை எதிர்த்து சண்டை செய்வது இவரது வாடிக்கை. பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டதால் அவர் மீது குற்ற வழக்கங்களும் இருந்தன. அவர் சில ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையிலும் வாழ்ந்து வந்தார்.

மேலும், திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் பிரபல ரவுடியாக இருந்தவர். இவர்மீது பல கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இல்லை, இவர் தலித் மக்களுக்கான போராளியாக திகழ்ந்தார் எனும கருத்தும் உண்டு.

2014 ஆம் ஆண்டு, வழக்கு ஒன்றில் ஆஜராகி போலீஸ் வாகனத்தில் திரும்புகையில் சுடப்பட்டார் என்றும், விபத்தில் இறந்தார் என்றும் கூறப்பட்டது.
இவருக்கு “டெல்டா கிங்” என்னும் சிறப்புப் பெயரில் அழைக்கப்பட்டார்.

வாழ்க்கை வரலாறும், எதிர்ப்போம்!
இவரது வாழ்க்கை வரலாறைத்தான் தற்போது பா.ரஞ்சித் இயக்கி வருகிறாராம். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அதாவது பட்டியலின சமூக மக்களை சேர்ந்த சில குழுவினர்; அமைப்பினர் இந்தப் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களாம்.

இயக்குநர் பா.ரஞ்சித் படம் என்றாலே எதிர்ப்புகள் இருக்க தானே செய்யும் என்று நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here