விஷ்ணு விஷால் – ராம்குமார்
விஷ்ணு விஷால் – ராம்குமார் கூட்டணியில் உருவாகி சென்ற 2018ஆம் வருடம் வெளிவந்த திரைப்படம் ராட்சசன். இதற்கு முன் இந்த கூட்டணியில் ரிலீசான முண்டாசுப்பட்டி படத்தின் வெற்றியை தொடர்ந்து 2 வது முறையாக இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து கொடுத்த படம் தான் இது.

சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்களத்தில் அமைந்த இப்படம் நம் எல்லோரையும் கவர்ந்தது. தமிழ் சினிமாவின் மிக சிறந்த படைப்புகளில் ராட்சசன் படமும் ஒன்று என கூறினால் கூட மிகையாகாது.
ராட்சசன் வெற்றியை தொடர்ந்து சில வருடங்களுக்கு பின் மீண்டும் விஷ்ணு விஷால் – இயக்குனர் ராம் குமார் தற்போது இருவரும் கூட்டணி அமைத்துள்ளனர். இப்படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரித்து கொண்டிருக்கிறார்.
ராட்சசன் 2?
இப்படம் Fantasy கதைக்களத்தில் உருவாகிறது என சொல்லப்பட்ட நிலையில், தற்போது வெளிவந்துள்ள செய்தி என்னவென்றால், இது ராட்சசன் திரைப்படத்தின் 2 ஆம் பாகம் தானாம். ராட்சசன் 2 ஆம் பாகத்தின் ஷூட்டிங் தான் தற்போது நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது.

இந்த தகவல் ராட்சசன் 2 திரைப்படத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை தந்தாலும் கூட, இது எந்த அளவிற்கு நிஜம் என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here