Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

“ரஹ்மான் எனக்கு தந்தை மாதிரி” : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பெண் இசை கலைஞர்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது தந்தையை போன்றவர் என அவருடன் பணியாற்றிய மோகினி டே தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இசைபுயல் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் தனது…

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது தந்தையை போன்றவர் என அவருடன் பணியாற்றிய மோகினி டே தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இசைபுயல் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் தனது மனைவியை விட்டு பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதே சமயத்தில் ரஹ்மான் அவர்களிடம் இசைக்குழுவில் பணியாற்றிய மோகினி டே என்ற பெண்ணும் விவாகரத்து பெற்றுள்ளார்.

இந்த இரு விஷயத்தையும் தொடர்புப்படுத்தி ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இதற்கு ஏ.ஆர் ரஹ்மான் தரப்பு மறைமுகமாக கண்டனத்தை தெரிவித்துள்ளது.

அது சமயம் தற்போது சம்பந்தப்பட்ட பெண்ணும் தனது கட்டனத்தை தெரித்துள்ளார்.

Advertisements

இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், ரஹ்மான் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளதாகவும், பிறரது தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளியுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பான தன் வீடியோ பதிவில் மோகினி டே, “எனக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும் எதிராக, தவறான மற்றும் ஆதாரமற்ற அனுமானங்கள், கூற்றுக்கள் பரப்பப்படுவதை பார்த்தேன். இரு தனிவேறு சம்பவங்களை தொடர்புபடுத்தி கொச்சைப்படுத்தியிருப்பது வேதனை தருகிறது. உண்மையில் இவையாவும் குற்றச்செயல்கள்”.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here