மோசடி வழக்கில் சிக்கியுள்ள நடிகை தமன்னா, நடிகை காஜல் அகர்வால் : சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போலீஸ் திட்டம்

0
36

புதுச்சேரி காவல்துறை கிரிப்டோகரன்சி மோசடி வழக்கில் நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர்க்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது.

புதுச்சேரியில் நடந்த பல கோடி கிரிப்டோகரன்சி மோசடி தொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யுங்கள் பல மடங்கு லாபத்தை தருகிறோம் என ஆசை வார்த்தை கூறி புதுச்சேரியைச் சேர்ந்த 10 நபர்களிடம் 2 கோடியே 40 லட்ச ரூபாய் பணத்தை முதலீடு செய்ய வைத்தனர். அந்த பணத்தை எடுக்க முடியாமலும் போட்ட பணம் கூட கிடைக்க முடியாமல் கிரிப்டோ கரன்சியாக கூட வாங்க முடியாமல் பணத்தை நஷ்ட படுத்தி விட்டார்கள்” என்று புதுச்சேரி லாஸ்பேட்டை சேர்ந்த முன்னாள் அரசு ஊழியர் அசோகன் என்பவர் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகார் சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து இணைய வழி காவல் துறை காவல் ஆய்வாளர் கீர்த்தி விசாரணை மேற்கொண்டார். 

இந்த விசாரணையில் எஸ்.எஸ்.பி நாரா சைதன்யா கிரிப்டோ கரன்சி சம்பந்தமான அறிவுரைகளையும் பின்பற்றி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாஸ்கரன்  ஆலோசனின் படி விசாரணை மேற்கொண்டனர். இந்த மோசடி கும்பல் கோயமுத்தூரை தலைமையிடமாக கொண்டு சினிமா நடிகை தமன்னா மற்றும் பல்வேறு சினிமா பிரபலங்கள் தொழிலதிபர்கள் கலந்து  கொண்டு மிக பிரம்மாண்டமாக 2022இல் துவக்க விழாவை நடத்தியுள்னர்.

மூன்று மாதங்களுக்கு பிறகு நடிகை காஜல் அகர்வாலை வைத்து மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு ஹோட்டலில் 100 நபர்களுக்கு ஒரு கோடி ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் இருக்கின்ற கார்களை அவர்கள் முதலீடு செய்ததற்கு ஏற்ப பரிசாக வழங்கியுள்ளனர். மும்பையில் கப்பலில் மிகப்பெரிய விழாவை ஏற்பாடு செய்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட அந்த விழாவை பயன்படுத்தி பொதுமக்களிடமிருந்து நிதியை திரட்டியது தெரியவந்தது 

கிரிப்டோ கரன்சி எந்த விதமான கிரிப்டோ கரன்சி டிரேடிங் ஆப்களிலும் வரவில்லை என்பதும் பணத்தை நேரடியாக இவர்கள் ஹைபை சர்க்கிள் என்ற ஒரு வங்கி கணக்கிற்கு புதுச்சேரியை சேர்ந்த அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. டி.சி எக்ஸ் என்ற ஒரு காயினை உங்களுக்கு அனுப்புகிறோம் என்று சொல்லி இவர்களாக உருவாக்கிய ஒரு கிரிப்டோ கரன்சியை புதுச்சேரி நபர்களுக்கு அனுப்பி அந்த டிசிஎஸ் காயினை வவிற்பனை செய்ய முடியவில்லை. பழையபடி பணமாக மாற்ற முடியாமலும் திகைத்தனர். அஸ்.பே என்கிற பிளாட்பார்மை காணாமல் போகச் செய்து அனைவருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தியது உள்ளனர்.

ஒருவரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது. மேலும் இந்த வழக்கில் பல்வேறு குற்றவாளிகள் சிக்குவார்கள்  என்றும் சொல்லப்படுகிறது. இனிமேல் இந்த மோசடி வழக்கில் நடிகை தமன்னா மற்றும் நடிகை காஜல் அகர்வால் ஆகியோரை வைத்து அரங்கேற்றி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே புதுச்சேரி காவல் துறையினர் இரண்டு நடிகைகளிடம் தனித்தனியே விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்காக நடிகை தமன்னா மற்றும் நடிகை காஜல் அகர்வால் ஆகியோரிடம் சம்மன் அனுப்ப உள்ளனர்.

கோடிக்கணக்கான ரூபாய் மோசடி சம்பவத்தில் இரண்டு தமிழ் சினிமா நடிகைக்கு சம்பந்தப்பட்ட உள்ளது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here