தற்போது தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. நன்றாக ஓட்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற மாஸ் திரைப்படங்கள் தொடர்ந்து ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் தியேட்டர் முதலாளிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
புதிதாக வெளிவரும் படங்கள் ஒரு வாரம் கூட சரியாக ஓடுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதனால் பத்து பதினைந்து அல்லது 20 ஆண்டுகளுக்கு முன் வெளியான நல்ல படங்களை ரீ-ரிலீஸ் செய்து தியேட்டர் முதலாளிகள் கல்லா கட்டி வருகிறார்கள்.


ரீ-ரிலீஸ் திருவிழா:-
நடிகர் சிலம்பரசன் அவர்களின் வல்லவன், மன்மதன், நடிகர் விஜய் அவர்களின் கில்லி, நடிகர் அஜித்குமார் அவர்களின் தீனா, தனுஷ் அவர்களின் புதுப்பேட்டை போன்ற பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் பட்டியலில் சிவகார்த்திகேயன் அவர்களும் இணைய உள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பொன்ராம் கூட்டணியில் உருவான படம் ரஜினி முருகன். இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாக இமாலய சாதனையும் படைத்தது. இந்தப் படத்தில் டி.இமான் அவர்களின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் செம ஹிட். இந்தப் படத்தின் மூலம் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் தமிழ் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்தப் படம் தமிழக முழுவதும் அடுத்த மாதம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here