தமிழ் சினிமாவில் நெப்போடிசம் இல்லை : அடித்து சொல்லும் நடிகர் பரத் 

0
168

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இயக்குநர்களின் வாரிசுகள் கதாநாயகர்களாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் நெப்போடிசம் இல்லை என்று நடிகர் பரத் அடித்து சொல்கிறார்.

பிரமாண்ட இயக்குநர் சங்கர் அவர்களின் இயக்கத்தில் உருவான “பாய்ஸ்” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பரத். அதனை தொடர்ந்து, “காதல்” என்ற வெற்றி படத்தின் மூலம் ‘சின்னத் தளபதி’ என்னும் பட்டத்தையும் பெற்று தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.  நடிகர் பரத் அவர்களுக்கு தொடர்ந்து சில படங்கள், ஓடினாலும் பல படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை். அவர் நடித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்ததால் மார்க்கெட்டையும் இழந்தார்.

ப்ரஸ் மீட்:-

இந்நிலையில், இயக்குநர் பிரசாத் முருகன் இயக்கத்தில் பரத், அபிராமி, பவித்ரா லக்‌ஷ்மி, அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ் படத்தின் பிரஸ்மீட் நேற்று நடைபெற்றது. அதில், நடிகர் பரத் மற்றும் படத்தில் நடித்துள்ள நடிகைகள் பங்கேற்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்னாடி சென்னையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குநர் கூறினார்.

பத்திரிகையாளர் கேள்வி:-

அப்போது பத்திரிகையாளர் ஒருவர், நடிகை பரத் அவர்களிடம் “பாலிவுட் சினிமா போன்று தமிழ் சினிமாவில் நெப்போடிசம் உள்ளதால், உங்களால் தமிழ் சினிமாவில் சாதிக்க முடியவில்லையா? என்று கேள்வி எழுப்பினர்.

பரத் பதில் :-

அதற்கு நிதானமாக பதிலளித்த நடிகர் பரத் அவர்கள், பாலிவுட் சினிமா போன்று தமிழ் சினிமாவில் நெப்போடிசம் இல்லை். நான் நெப்போடிசம் போன்ற விசயங்களை எப்போதோ நான் கடந்து வந்து விட்டேன். உங்களுக்கு திறமை இருந்தால் தமிழ் சினிமாவில் முன்னேறலாம் என்று கூறினார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here