திருப்பதி லட்டு வீடியோ காலி : பாஜகவினர் நெருக்கடி கொடுத்தார்களா?

0
178

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியிட்டு இருந்த பரிதாபங்கள் குழுவினருக்கு பாஜக கட்சியை சேர்ந்த சிலர் நெருக்கடி கொடுத்ததால் அந்த வீடியோவை டெலிட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

வீடியோ காலி – சொன்னது யார்?

திருப்பதி லட்டு விவகாரம் பெரிய சர்ச்சையாகி உள்ள நிலையில் இந்த விவகாரத்தில் பரிதாபங்கள் யூடியூப் சேனல் நிர்வாகிகள் கோபி – சுதாகர் காமெடி வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டு இருந்தனர். நேற்று இந்த வீடியோ பெரிய அளவில் டிரெண்டானது. இந்த வீடியோ டிரெண்டான் போதே.. அதை பரிதாபங்கள் குழுவினர் இன்று காலை நீக்கியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் சிலர் இந்த வீடியோ குறித்து சர்ச்சையாக பேசிய நிலையில், பரிதாபங்கள் குழுவினர் அந்த வீடியோவை நீக்கினர்.

அழுத்தம்: 

இது தொடர்பாக அந்த குழுவிற்கு “சிலர்” அழுத்தம் கொடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாஜக நிர்வாகி எஸ்.ஜி சூர்யா இது தொடர்பாக செய்திருந்த போஸ்டில், பரிதாபங்கள் குழுவினர் அந்த வீடியோவை நீக்கி உள்ளது. நல்ல புத்தி இப்போதாவது வந்ததே. வேறு எந்த சமூகத்தையும் அல்லது மதத்தையும் கேலி செய்யும் வகையில் இதுபோன்ற வீடியோவை எடுக்க அவர்கள் துணிந்திருக்க மாட்டார்கள். ஆனால் இந்து மதத்தை பற்றி மட்டும் அவர்கள் இப்படி செய்துள்ளனர் என்பது மிகவும் வெளிப்படையானது. இந்த வீடியோவையோ டெலிட் செய்வதை.. சாத்தியமாக்கிய.. ஆனால் பெயரை வெளியிட விரும்பாத “அந்த” சில நல்லவர்களுக்கு எனது பாராட்டுக்கள், என்று குறிப்பிட்டு உள்ளார்.

பாஜக நிர்வாகிகளும், இந்து அமைப்பை சேர்ந்த சிலரும் இந்த வீடியோ குறித்து பரிதாபங்கள் குழுவினருக்கு நெருக்கடி கொடுத்ததால் டிரெண்டிங்கிலும் இருந்தும் இந்த வீடியோவை அவர்கள் யூடிப்பில் இருந்து நீக்கியதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here