Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

புதிய பாதை படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில்.. இன்றைய டிரெண்டுக்கு ஏற்ப மாறுகிறார் பார்த்திபன்!

Pudhea Paadhai 2 Movie Coming Soon : 1989ஆம் ஆண்டு ரிலீசாகி மிக பெரிய வெற்றிபெற்ற புதிய பாதை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் ரிலீசாக…

Pudhea Paadhai 2 Movie Coming Soon : 1989ஆம் ஆண்டு ரிலீசாகி மிக பெரிய வெற்றிபெற்ற புதிய பாதை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் ரிலீசாக உள்ளதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இப்படத்தில் சீதா, மனோரமா, வி.கே.ராமசாமி ஆகியோர்கள் நடித்திருந்தனர். இப்படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதை பெற்றது. இப்படம் இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

Pudhea Paadhai 2 Movie Coming Soon
Pudhea Paadhai 2 Movie Coming Soon

பார்த்திபன், நந்திதா தாஸ் மற்றும் தேவயானி இவர்களது நடிப்பில் 2002ஆம் ஆண்டு ரிலீசான படம் அழகி இப்படத்தை தங்கர் பச்சான் இயக்கினார். இந்தப்படத்தை உதய கீதா தயாரித்திருந்தார். மேலும் இப்படத்திற்கு இசையை இளையராஜா அமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று நீண்ட நாள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இதையடுத்து தெலுங்கில் ரீமேக் செய்து 2004ஆம் வருடம் ரிலீஸ் செய்யப்பட்டது.

அழகி மறுவெளியீடு:

இந்த நிலையில் இப்படம் 22 ஆண்டுகள் கழித்து 31/03/2024 மறு வெளியீடு ஆகியுள்ளது. சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பார்த்திபன், இந்த விழாவில் தங்கர்பச்சான் பங்கேற்று இருக்க வேண்டும் அவர் இப்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.

அவர், நானும் ஒரு இயக்குநர் என்பதை மறந்து விட்டு என்னிடம் வந்து கேட்பார், தமிழ் சினிமாவில் என்னை காட்டிலும் நல்ல படம் எடுக்க யாரு இருக்காங்க என்பார். அதைபோல தான் பிரச்சாரத்திலும் என்னை விட நல்லவன் கிடையாது என்று சொல்லி ஓட்டு கேட்பார். அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் அவருக்கு இப்போதே என் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்.

Pudhea Paadhai 2 Movie Coming Soon

அழகான காதல் கதை:

Advertisements

உண்மையில் இந்த அழகி படம் ஒரு மேஜிக்கல் திரைப்படம் தான், இந்த படத்தில் காதலை மிக அழகாக சொல்லி இருப்பார்கள். எப்போதுமே காதலில் ஜெயித்து மனைவி ஆவதில் உள்ள மகிழ்ச்சியை காட்டிலும், தோற்ற காதலை மனம் நினைத்து கொண்டு, அந்த காதலியை தேடிக்கொண்டு தான் இருக்கும் அதுபோன்ற திரைப்படம் தான் அழகி. இந்த படத்தில் தனம் என்ற கேரக்டரில் அருமையாக நடித்து இருப்பார். அதைவிட வளர்மதியாக நடித்த தேவயாணியின் கேரக்டர் என்னை மிகவும் கவர்ந்தது என்றார்.

இதையும் படிங்க : அரண்மனை 4 படத்தில் நடிப்பதிலிருந்து விஜய் சேதுபதி விலகியது குறித்து உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி

விரைவில் புதிய பாதை 2: Pudhea Paadhai 2 Movie Coming Soon

இதை பற்றி பேசிய பார்த்திபன், நான் இயக்கி நடித்த புதிய பாதை படத்தை நேரடியாக ரீமேக் செய்யப்போகிறேன். டார்க்ர் வெப் என்கிற பெயரில் இயக்கி, நானே நடிக்கத் திட்டமிட்டுள்ளேன். இப்போது, இயக்கி வரும் டீன்ஸ் படத்திற்குப் பிறகு டார்க் வெப் பணிகளை தொடங்குவேன் என்றார். 1989ஆம் ஆண்டு ரிலீசான இத்திரைப்படத்தை முதன் முதலாக பார்த்திபன் எழுதி இயக்கி இருந்தார். இப்படத்தில் சீதா, மனோரமா மற்றும் வி.கே.ராமசாமி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதை வென்றது குறிப்படத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here