தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இயக்குநராக, நடிகராக, பாடலாசிரியராக வளம் வரும் தனுஷ் அவர்களின் மகன் யாத்ரா பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.
தமிழ் சினிமாவில் “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் தனுஷ். அதனைதொடர்ந்து தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் “காதல் கொண்டேன், புதுப்பேட்டை” ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முக்கிய நாயகராக உருவானார்.
இதையடுத்து, தனது நண்பரான வெற்றிமாறன் இயக்கத்தில் “பொல்லாதவன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உச்சம் தொட்டார். அதன் பிறகு “ஆடுகளம், அசுரன்” ஆகிய படங்களின் மூலம் தேசிய விருதுகளையும் வென்றார். வெற்றிகரமான நடிகராக, இயக்குநராக பாடலாசிரியராக என பல்வேறு அவதாரங்கள் எடுத்துள்ள தனுஷ் அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளன.
தற்போது நடிகர் தனுஷ் அவர்கள் இயக்கத்தில் வெளியான ராயன் என்ற படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றதையடுத்து, தன்னுடைய இயக்கத்தில் உருவாக உள்ள மூன்றாவது படத்திற்கு “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற படத்தை இயக்கி உள்ளார்.

இதில், தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்தப் படத்தை தனுஷின், வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. காதல் கதையை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தின் முதல் சிங்கிள் (ஒருபாடல்) வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள “கோல்டன் ஸ்பேரோ” என்னும் பாடலின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பேரனும், தனுஷ் அவர்களின் மூத்த மகனுமான யாத்ரா பாடலாசிரியராக அறிமுகமாக உள்ளார். இதனை நடிகர் எஸ்.ஜே. சூர்யா அவர்கள் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு கிசுகிசுவை வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலில் மடிசார் சேலையில் நடிகை பிரியங்கா மோகன் ஒரு குத்தாட்டம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் வாரிசுகள் பாடலாசிரியராக அறிமுகமாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here