ஐயோ பாவம்.. நடிகை ரேவதியின் மொத்த சொத்து இவ்வளவு கம்மியா நம்ப முடியலையே..!

0
123

80ஸ்-களில் நடிகை ரேவதி இளைஞர்கள் மனங்களில் கனவுக்கன்னியாக இடம்பிடித்து முன்னணி ஹீரோயினியாக வலம் வந்தவர். 30 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து கொண்டிருபவர் நடிகை ரேவதி. மண்வாசனை, தேவர் மகன், மௌனராகம், புதுமை பெண் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் வெளிவந்த நவரசா ஆந்தாலஜி தொடரில் கூட முக்கியமான கேரக்டரில் ரேவதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தனது நடிகை ரேவதி நடிப்பால் அசத்தியிருக்கிறார். அந்த சமயத்தில் தமிழ் சினிமாவில் ரேவதிக்கு அதிக மார்க்கெட் இருந்தது. ரேவதியின் சுட்டித்தனமான குணமும், அவரது சின்ன முகமும் தொடர்ந்து அவர் ஹீரோயினியாக இருப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்த சமயத்தில், மற்ற ஹீரோயினிகளுக்கு வரும் படங்களும் கூட பிறகு ரேவதிக்கு கைமாறிய நிகழ்ச்சிகளும் நடந்தன.

அந்த காலங்களில் இருந்த பல முன்னணி நடிகர்களுடனும் கதாநாயகியாக நடித்து இருந்தார் நடிகை ரேவதி. தன்னுடைய கலக்கலான படங்களை கொடுத்து வந்த நிலையில், மலையாள இயக்குனரான சுரேஷ் சந்திர மேனன் என்பவரை கல்யாணம் செய்துகொண்டு, 2013 ஆம் வருடம் இருவருக்கும் கருத்து வேறுபாடு உண்டானதால் விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர். ரேவதிக்கு குழந்தை இல்லாததால் தான் சுரேஷ் சந்திரமேனன் விவாகரத்து செய்தாராம்.

இதனால் ரேவதி மனம் நொந்துபோய் கணவரை பிரிந்த பின்னர் தனது 50 வது வயதில் டெஸ்ட்டியூப் முறையில் பெண் குழந்தை பெற்றாராம். எந்த காரணத்தினால் கணவர் விட்டு சென்றாரோ அதை நிரூபித்து காட்டும் வகையில் பெண் குழந்தையை பெற்று மகளுடன் தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் நடிகை ரேவதி. ஆனால் குழந்தை இல்லாததால் ரேவதி பல கேலி, கிண்டல்களால் மிகுந்த மண உளைச்சலுக்கு ஆளானாராம்.

குழந்தை பிறந்து பிறகு அவர் முழு நேரமும் மகளுடன் நேரத்தை செலசெய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், ரேவதி சமூக நல உணர்வாளராகவும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இந்நிலையில் ரேவதியின் முன்னாள் கணவர் சுரேஷ் சந்திரமேனன் மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு தூது அனுப்பிக்கொண்டுள்ளாராம்.

ரேவதியின் திரையுலக தோழர்களும் கணவரோடு சேர்ந்து வாழ சொல்லி தங்களது விருப்பத்தை தெரிவித்து வருவதால் ரேவதி என்ன முடிவு செய்வார் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. வாழ்க்கையில் குழந்தையில்லாததால் பலத்த போராட்டத்தை சந்தித்தவர், இறுதியில் டெஸ்ட் டியூப் குழந்தையை பெற்று நிம்மதியாக வாழ்ந்து வரும் நிலையில் மீண்டும் சுரேஷ் சந்திரமேனனுடன் சேர்ந்து வாழ்வாரா என்பது கேள்வி குறியாக இருக்கிறது.

இந்நிலையில், இன்று பிறந்த தினத்தை கொண்டாடும் நடிகை ரேவதியின் சொத்து மதிப்பு இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. அதாவது, 50 கோடி ரூபாய் வரைக்கும் இவருடைய சொத்து மதிப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கேரளாவில், கிளாசிக் லுக்குடன் ஒரு வீடு அதன் விலை 3 முதல் 4 கோடி என்று கூறப்படுகிறது. அதைப்போல் சென்னையில், வசிக்க ஹைடெக் வீடு அதன் மதிப்பு 5 கோடி இருக்குமாம். வீடு மட்டுமல்லாமல் 2 ஆடம்பர கார்களையும் வைத்துள்ளாராம்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here