இதனால் 2 ம் திருமணம் பண்ணி கொண்டேன்.. மனம் திறந்த பேசிய சீரியல் நடிகை ஸ்ருத்திகா…

0
74

சன் டிவி நாதஸ்வரம் தொடரில் நாயகியாக நடித்த ஸ்ருத்திகா அண்மையில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் ஆரியனை 2 வது கல்யாணம் செய்து கொண்டார். இந்நிலையில் தன்னுடைய 2 வது கல்யாணம் பற்றி ஸ்ருத்திகா மனம் திறந்து பேசி இருக்கிறார்.

திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான நாடகம் நாதஸ்வரம். இதில் அவரின் இணையாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஸ்ருத்திகா. தொடர்ந்து திருமுருகன் இயக்கத்தில் பல தொடர்களில் நடித்திருக்கிறார். இருவருக்கும் காதல் எனக் கிசுகிசுக்கப்பட்டாலும் இவர் 2019 ஆம் வருடம் சனேஷ் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.

இவர்கள் திருமணம் கோலங்காலமாக நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பிறகும் நடிகை ஸ்ருத்திகா சீரியலில் பிஸியாக நடித்து வந்தார். கல்யாண பரிசு, அழகு, மகராசி, வைதேகி, உறவுகள் சங்கமம், முகூர்த்தம், கலசம், கோகுலத்தில் சீதை மற்றும் உயிர் என பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில்அண்மையில் இவர் தன்னுடன் மகராசி சீரியலில் நாயகனாக நடித்த ஆரியனை 2 ம் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் முதலில் காதலிக்கிறார்கள் என ரசிகர்கள் கிசுகிசுத்தாலும் அது பற்றி பேசாமல் இருந்தவர்கள் திடீரென தங்களது கல்யாண அறிவிப்பை வெளியிட்டனர். தற்போது இந்த திருமணம் பற்றி ஸ்ருத்திகா மனம் திறந்து பேசி இருக்கிறார்.

என்னுடைய முதல் கணவர் சனேஷ் மிகவும் நல்ல மனிதர். ஆனால் அவருக்கும் எனக்கும் உண்டான திருமண உறவு நிறைய மன சங்கடத்தில் முடிந்தது. எங்கள் இருவருக்கும் சரிபட்டுவரவில்லை. என்னுடைய பெற்றோர்கள் பார்த்து செய்த திருமணம் என்றாலும் நிறைய ஏமாற்றங்களை நான் அதில் சந்தித்தேன். நான் அவரை குறை சொல்ல விரும்பவில்லை.

அதுபோலவே ஆரியனின் முதல் கல்யாணத்திலும் அவர் மனைவியுடன் இதே போல பிரச்சனை இருந்தது. பல பிரச்சினைகள் ஏற்பட்ட போதும் அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க தான் நான் எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் அது கடைசிவரையில் ஒத்துப் போகவில்லை. அப்போது தான் எங்கள் பெற்றோர் நீங்கள் இருவரும் திருமணம் பண்ணிக்கொள்ளலாமே என அறிவுரை கூறினர்.

அதைத்தொடர்ந்தே நாங்கள் இருவரும் கல்யாணம் செய்து கொண்டதாக ஸ்ருத்திகா கூறியிருக்கிறார். நடிகர் ஆரியனின் முதல் மனைவியும், நடிகையுமான நிவேதா தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகர் சுரேந்தரை கல்யாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here