இனிமேல் நாயகி ஸ்ருதிஹாசன் குறித்த சில சுவாரஸ்யமான செய்திகள்

0
161

இனிமேல் ஆல்பம் பாடல்
லோகேஷ்-ஸ்ருதி நடித்து உருவாக்கி இருக்கும் இனிமேல் ஆல்பம் பாடலுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஒரே பாடலில் இயக்கம், இசை, நடிப்பு என பல திறமைகளை செய்துள்ள ஸ்ருதிஹாசனை பற்றி பலருக்கும் தெரியாத விஷயங்களை இங்கு பார்க்கலாம்.

போலியான பெயர்

சென்னையில் வளர்ந்த ஸ்ருதி தனது அடையாளத்தை பள்ளியில் வெளிப்படுத்த வேண்டாம் என்பதற்காக பெயரை மாற்ற முடிவு எடுத்தார். அவர் பூஜா ராமச்சந்திரன் என்கிற பெயரில் தனது பள்ளி படிப்பை தொடர்ந்துள்ளார்.

திரைப்பட அறிமுகம்

எல்லோரும் நினைப்பது போன்று ஸ்ருதியின் சினிமா அறிமுகம் லக் என்ற இந்தி படத்தில் தொடங்கவில்லை. 2000 த்தில் கமல் இயக்கி நடித்த ஹே ராம் படத்தில் வரும் குழந்தை ரோலில் ஸ்ருதி நடித்திருக்கிறார்.

நன்கு படித்த நடிகை

இவர் கோலிவுட்டில் நிறைய படித்துள்ள நடிகைகளில் ஒருவர். மும்பையில் செயின்ட் ஆண்ட்ரூ கல்லூரியில் உளவியல் பட்டம் பெற்றவர். நடிப்பினை தொழிலாக தேர்வு செய்வதற்கு முன்னாள் கலிபோர்னியாவில் பிரபல மியூசிக் கல்லூரியில் இசையை கற்றுள்ளார்.

இசையில் ஆர்வம்

நன்கு பயிற்சி பெற்ற கிளாசிக்கல் பாடகர் ஸ்ருதி. அவர் சொந்தமாக இசைக்குழுவை வைத்திருக்கிறார். அந்த குழுவில் லீட் பாடகராக ஏராளமான ஹிட் ஆல்பங்களை மக்களுக்கு கொடுத்து இருக்கிறார்.

நடன பிரியர்

ஸ்ருதி பயிற்சி பெற்ற சிறந்த கிளாசிக்கல் நடன கலைஞசர், இவர் ஏராளமான மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களின் பாராட்டுகளை பெற்றுள்ளார். இது தவிர,oh my friend படத்திக்காக குச்சிப்புடி நடனம் கற்றுக்கொண்டார்.

பல மொழி வித்தகர்

தமிழ், தெலுங்கு, இந்தி, இங்கிலீஷ் போன்ற 8 மொழிகளை சரளமாக பேசுவார் ஸ்ருதி. இது பல்வேறு பகுதிகளை சேர்ந்த பார்வையாளர்களுடன் சேர்வதற்கும், பல மொழி படங்களில் நடிப்பதற்கான நுழைவு வாயிலாக இருந்தது.

சமூக நலனுக்கு குரல் கொடுப்பார்

பாலின சமத்துவம், விலங்குகள் நலன் மற்றும் மனநல விழிப்புணர்வு ஆகிய முக்கியமான சமூக காரணங்களுக்காக குரல் கொடுத்தவர் ஸ்ருதி. தன்னார்வு தொண்டுகளின் பல நிகழ்வுகளில் குறிப்பிட்ட பங்கை கொடுத்துள்ளார்.

ஷூ மீது காதல்

ஸ்ருதிக்கு,காலணிகள் மீது தனி ஈர்ப்பு உள்ளது. அவரிடம் கிட்டத்தட்ட 100 ஜோடி ஷூக்கள் உள்ளதாகவும், நிறைய பணம் சம்பாதித்தால் நிறைய ஷூக்களை வாங்குவேன் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here