துணை முதலமைச்சர் படத்தில் பாடிய நடிகர் சிம்பு

0
88

நடிகர் சிலம்பரசன் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

நடிகர் சிலம்பரசன் அவர்கள் தற்போது தனது 49 ஆவது, 50வது மற்றும் 51வது ஆகிய மூன்று படங்களை அடுத்தடுத்து நடித்து வெளியிட தயாராகிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து மூன்று படங்களையும் தன் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் மற்ற நடிகர்களின் படங்களுக்கும் அவர் பாடல்கள் பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

சமீபத்தில் வெளியான டிராகன் படத்தில் கூட அவர் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பவர் ஸ்டார் படத்தில் பாடிய சிம்பு :-

இந்நிலையில், சிம்பு அடுத்து பவர் ஸ்டார் பவன் கல்யாண் படத்திற்கு பாடல் பாடியுள்ளார். அதாவது, பவன் கல்யாண் தற்போது இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் ‘ஓஜி’ என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள முதல் பாடலான ‘தே கால் ஹிம் ஓஜி’ என்ற பாடலை தான் நடிகர் சிம்பு பாடியுள்ளார்.  

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here