அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து வெளியான மாயாண்டி குடும்பத்தார் படத்தை டைரக்ட் செய்தவர் ராசு மதுரவன். அவர் கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக ஆகிய படங்களையும் இயக்கி உள்ளார்.
ராசு மதுரவன் கடந்த 2013 ஆண்டு கேன்சரால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவருக்கு 2 மகள்கள் உள்ள நிலையில் தற்போது அவர்களுக்கு பள்ளிக்கு கட்டணம் கட்ட கூட முடியாமல் மனைவி பவானி வறுமையில் கஷ்டப்படுவதாக சமீபத்தில் பேட்டி அளித்து இருந்தார்.

சிவகார்த்திகேயன் உதவி
ராசு மதுரவன் இயக்கிய படத்தில் எதிலும் நடிக்காத சிவகார்த்திகேயன் அவரது மனைவியின் பேட்டியை பார்த்ததும் உடனே சென்று உதவி செய்து இருக்கிறார்.
ராசு மதுரவன் 2 மகள்கள் ஸ்கூல் பீஸ் 97,000 ரூபாயை அவர் செலுத்தி இருக்கிறார்.

இதற்காக அவரது மனைவி நெகிழ்ச்சியாக நன்றி சொல்லி இருக்கிறார். அவர் இயக்கத்தில் நடித்த இயக்குனர்கள் மற்றும் பல நடிகர்கள் கண்டுகொள்ளாத நிலையில் சிவகார்த்திகேயன் செய்த உதவி சந்தோஷம் கொடுப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here