பணம் வெட்கம் அறியாதுன்னு நிரூபித்தவர் சூரி..உருட்டுன உருட்டுக்கு கூச்சமில்லாமல் உறவை புதுப்பித்த கருடன்

0
572
Soori and Vishnu Vishal problem solved
Soori and Vishnu Vishal problem solved

சூரி இப்போது கதாநாயகனாக கலக்கி கொண்டிருக்கிறார். விடுதலை 2, கருடன் மற்றும் கொட்டுக்காளி என அடுத்தடுத்த படங்கள் வரிசையாக இருக்கிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள ஒரு புகைப்படம் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது. அதாவது எதிரி போல் சண்டை போட்ட விஷ்ணு விஷாலுடன் நெருக்கமாக உள்ளார்.

Soori and Vishnu Vishal problem solved
Soori and Vishnu Vishal problem solved

நிலம் வாங்குவதில் சூரிக்கும் இவருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. விஷ்ணு விஷாலின் அப்பா பண மோசடி செய்தார் என மீடியாக்களில் தெரிவித்த சூரி அதை நீதிமன்றம் வரை எடுத்து சென்றார்.

பதிலுக்கு விஷ்ணு விஷாலும் காட்டமாக பதிலளித்தார். எதிர்காலத்தில் இனி சூரியுடன் நடிக்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இந்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்து விட்டதாக அவரே தெரிவித்தார்.

விஷ்ணு விஷாலுடன் இணைந்த சூரி | Soori and Vishnu Vishal problem solved

அப்போதே இதை பற்றி நாலு பேர் நாலு விதமாக பேசினார்கள். இந்நிலையில் விஷ்ணு விஷால் தன் அப்பா மற்றும் சூரி உடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Soori and Vishnu Vishal problem solved
Soori and Vishnu Vishal problem solved

இதையும் படிங்க : கோடி கோடியாக தந்தாலும் வெங்கட் பிரபு படத்தில் நடிக்க மாட்டேன்.. பதற வைத்த ராமராஜன்..

அப்பா மற்றும் சூரி உடன் விஷ்ணு விஷால்

காலம் ஒன்றே எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும், நல்லதே நடக்கட்டும் சூரி அண்ணா என தெரிவித்திருக்கிறார். அதற்கு சூரியும் நன்றி தெரிவித்துள்ளார்.

இதை பார்த்த இணையவாசிகள் பணம் வெட்கமறியாது என நிரூபித்து விட்டார்கள். ஒரு காலத்தில் இவர்கள் இருவரும் என்ன உருட்டு உருட்டி கொண்டார்கள்.

ஆனால் இப்போது ஒன்றுமே நடக்காதது போல சேர்ந்து விட்டார்கள். ஆக மொத்தம் பணத்துக்கு தான் மதிப்பு என கண்டபடி விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு சிலர் இவர்கள் இணைந்ததற்கு வாழ்த்தும் சொல்லி வருகின்றனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here