ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் ரசிகர்களால் சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் தற்போது வேட்டையன் படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கானது சமீபத்தில் நிறைவடைந்தது.

அக்டோபர் மாதம் வேட்டையன் திரைப்படம் ரிலீசாகும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்ததாக ஜூன் 10ஆம் தேதி முதல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் கூலி படத்தில் நடிக்கவுள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளிவந்து மக்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. கூலி திரைப்படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 ஆம் பாகத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. ஆனால்,இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
ரஜினி வீட்டின் விலை
ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தை அவருடைய ரசிகர்கள் பலரும் அறிவார்கள். ரஜினிகாந்தின் பிறந்தநாள் மற்றும் தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் அவரை பார்க்க அங்கு செல்வார்கள். பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த வீட்டின் விலை ரூ. 35 கோடி இருக்கும் என செய்தி வெளியாகியுள்ளது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here