Indian 2 Twitter Review: கமல், ஷங்கர், ஏ ஆர் ரகுமான் காம்போவில் 28 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியன் வெளியானது. தாறுமாறென்று ஹிட் அடித்த இந்த படத்தை தொடர்ந்து தற்போது இந்தியன் 2, இந்த படம் 7 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் வெளியாகி இருக்கிறது.
இந்த படம் ரிலீஸிற்காக கடந்த சில வாரங்களாகவே பட குழுவினர் சுறுசுறுப்புடன் பிரமோஷனில் ஈடுபட்டிருந்தனர். அந்த உழைப்பின் பலனாக டிக்கெட் முன்பதிவு இதுவரை காணாத அளவுக்கு சாதனை படைத்தது.
இப்படி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை உண்டாக்கி இருந்த இப்படம் தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. ஆனால் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அதில் வழக்கம் போல கமல் மிரட்டி இருக்கிறார் என்பதுதான் எல்லோருடைய கருத்தாக இருக்கிறது. ஆனால் முதல் பாகத்தில் இருந்த அளவுக்கு கிரியேட்டிவிட்டி, சர்ப்ரைஸ் இதில் குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இந்தியன் 2 ட்விட்டர் விமர்சனம்
அதேபோல் ஷங்கரின் திரைக்கதை இன்னும் பழைய முறையில் இருக்கிறது என்றும் இக்காலத்திற்கு தகுந்தது போன்று இன்னும் சில விஷயங்களை கொடுத்திருந்தால் நல்லா இருக்கும் எனவும் ரசிகர்கள் தெறிவிக்கின்றனர்.
அதே சமயம் அனிருத் ஸ்கோர் செய்யும் அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால் இந்த படம் முழுவதும் கொட்டிக் கிடக்கும் பிரம்மாண்டமான காட்சிகளை பார்க்கும்போது தயாரிப்பாளர் காசை எந்த அளவிற்கு வாரி இறைத்திருக்கிறார் என்பதை காட்டுகிறது.
முதல் பாதி ஓகே ரகமாக இருந்தாலும் இரண்டாம் பாதி சற்று சலிப்பு அடைய செய்வதாக ரசிகர்கள் கூறுகின்றனர். ஆக மொத்தத்தில் இந்தியன் 3 ட்ரெய்லர் இறுதியில் காட்டக்கூடியது ஆடியன்சை கொண்டாட செய்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் இப்படத்தை தாண்டி இந்தியன் 3 செம விருந்தாக இருக்கும் என தெரிகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here