கோவையை சேர்ந்த கிராபிக்ஸ் நிறுவன உரிமையாளர் மீது இயக்குநர் பார்த்திபன் புகார் கொடுத்துள்ள நிலையில், செய்து கொடுத்த வேலைக்கு பணம் தர மறுப்பதாக பார்த்திபன் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தற்போது டீன்ஸ் என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். இப்படம் குழந்தைகளை மையப்படுத்தி அட்வென்சர் திரில்லராக உருவாகும் நிலையில், இப்படத்தின் கிராபிக்ஸ் மேற்பார்வையாளராக கோவையை சேர்ந்த ரியல் ஒர்க்ஸ் ஸ்டுடியோ உரிமையாளர் சிவபிரசாத் பணியாற்றி வந்தார்.
கடந்த பிப்ரவரி மாதத்துக்குள் கிராபிக்ஸ் வேலைகளை முடிக்க ஒப்பந்தமிட்டு முதற்கட்டமாக 43 லட்ச ரூபாயை கொடுத்துள்ளதாகவும், திட்டமிட்டப்படி வேலைகளை முடிக்காமல் மேற்கொண்டு 88 லட்ச ரூபாயை கொடுக்குமாறு கேட்டதாகவும் சிவபிரசாத் மீது இயக்குநர் பார்த்திபன் புகார் அளித்தார். இதன் பேரில், நம்பிக்கை மோசடி போன்ற 2 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில்,வேலைகளை முடிக்க தொடர்ந்து பல்வேறு முறையில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக சிவபிரசாத் வீடியோ மூலமாக விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், சிவபிரசாத் ஒப்பந்தத்தை மீறி அதிகமாக பணம் கேட்டது, குறிப்பிட்ட தேதியில் வேலைகளை முடித்துக் கொடுக்காதது தெரியவந்துள்ளது. இவ்வாறான சூழலில், பார்த்தீபன் தன்னை ஏமாற்றியதாக கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் நம்பிக்கை மோசடி (406), ஏமாற்றுதல் (420) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிவபிரசாத்தின் தனியார் கிராபிக்ஸ் நிறுவனமானது பல்வேறு முன்னணி படங்களுக்கு கிராபிக்ஸ் வேலைகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here