பிக்பாஸ் தனலட்சுமிக்கு அவரது அம்மா அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்.. காரணம் என்ன?

0
99

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களின் மோசமான கருத்துக்களைப் பெற்ற தனலட்சுமி தற்போது கூறியுள்ள செய்தி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பிக் பாஸ் தனலட்சுமி

பிரபல டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6 வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் தான் தனலட்சுமி.

மக்களின் பிரதிநிதியாக பங்கேற்ற இவருக்கு பிக் பாஸ் பார்வையாளர்கள் ஒரு கட்டத்தில் மிகுந்த வரவேற்பு கொடுத்து வந்தனர்.

ஆனால் நாட்கள் போக போக தனது பெயரை தானே கெடுத்துக் கொள்ளும் அளவிற்கு தனலட்சுமி செயல்பட்டு, கோபக்காரி என்று பெயரை வாங்கி வெளியேறினார்.

இந்நிலையில் தனலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பகுதியில், தனது அம்மா தனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த நோட்டீஸில், இனிமேல் தனது அம்மாவுக்கும் தனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும், அவருடைய பெயரை கூட நான் உபயோகப்படுத்தக்கூடாது என்று அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கான காரணத்தினை தான் வெளியே கூற விருப்பமில்லை என்றும் பதிவிட்டுள்ளார். இதனை கவனித்த ரசிகர்கள் பெரும் கோபத்தில் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

வீட்டு பிரச்சனையை எதற்காக வெளியே சொல்கின்றீர்கள் என்றும் உங்களுக்குள்ளே வைத்துக்கொள்ளுங்கள் என்று பலரும் அறிவுரை சொல்லி வருகின்றனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here