வாக்குவாதத்தில் சாச்சனா, சுனிதா, ஜாக்லின் : சரியாக கேட்ட விஜய் சேதுபதி

0
204

பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களால் வெடிக்கும் சண்டைகள். இதை ஆண் போட்டியாளர்கள் தடுக்க நினைத்தாலும் அவர்களை சேர்த்து வைத்து வம்பு இழுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளனது. 

குறிப்பாக, விஜய் டிவி சீரியல் நடிகை பவித்ரா, விஜய் டிவி பெண் தொகுப்பாளர் ஜாக்குலின், சுனிதா, சாச்சனா, தர்ஷா என பிரச்னை செய்யும் பெண்களின் பட்டியல் நீளும். ஆண் போட்டியாளர்கள் என்னவென்றால் அவர்களுள் கடுமையான போட்டிப்போட்டு கொள்கிறார்கள். விஜய் டிவி நடிகர் விஷால், தயாரிப்பாளர் ரவீந்தர், நடிகர் ரஞ்சித் இவர்களுக்குள் ஏற்படும் மோதலும் பார்வையாளர்கள் கோவப்பட வைக்கிறது.

இந்த வாரம் வந்த பிக் பாஸ் தொகுப்பாளரான விஜய் சேதுபதி அவர்களும், சண்டையிடும் போட்டியாளர்களை வச்சு செய்கிறார். யாருக்கும் பாரபட்சம் பார்ப்பது இல்லை. ரவீந்தர் -ரஞ்சித் விவகாரத்தையும் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய நிலையில், இன்றைய தினத்திற்கான பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல்நாளிலேயே வெளியேறி பின்பு மீண்டும் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த சாச்சனாவை அவர் அடுத்தடுத்து கேள்விகளால் துளைத்தெடுத்தார். 

சச்சனா வெறுப்பை சக போட்டியாளர்களிடம் இருந்து சம்பாதித்து வருகிறார். அன்ஷிதா, சௌந்தர்யா மற்றும் சுனிதாவை அவர் பட்டியலிட, இதைக் கேட்ட சுனிதா கொதித்தெழுந்ததை பார்க்க முடிந்தது. பெண்களுக்குள் யூனிட்டி, மண்ணாங்கட்டி என்று கூறிவிட்டு, பெண்களில் வீக் போட்டியாளர்கள் குறித்த விஷயத்தை ரவீந்தரிடம் கூறாமல், இங்கே கூறியிருக்க வேண்டும் என்றும் அவர் தன்னுடைய ஆதங்கத்தை இந்தப் பிரமோவில் வெளிப்படுத்தியுள்ளார்.

இது எப்படியோ பிரச்னை செய்பவர்கள் விஜய் சேதுபதியிடம் சிக்கப்போகிறார்கள். அவர் கேள்விகளால் இவர்களை வெறுத்தெடுக்கப் போகிறார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here