தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவலம் வந்து கொண்டு இருக்கிறார் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது GOAT திரைப்படம் உருவாகிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.

இப்படத்தை முடித்தபின் நடிகர் விஜய் தனது கடைசி படமான தளபதி 69 ல் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஹெச். வினோத் தான் இயக்கப்போகிறார் என பேசப்படுகிறது. ஆனால், இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு முடித்த பிறகு முழு நேரமாக அரசியலில் களமிறங்க போகிறேன் என விஜய் சொல்லியிருக்கிறார். மேலும் GOAT படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் நிலையில், ஜூன் மாதம் முழுவதும் அரசியல் வேலைகளில் தான் விஜய் ஈடுபடபோகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
பலரும் பார்த்திராத புகைப்படம்
திரையுலகை நட்சத்திரங்களின் அன்ஸீன் போட்டோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது கலைஞர் கருணாநிதி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ்நாடு மாநில விருது விழாவில் தளபதி விஜய் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த போட்டோவானது தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here