தி – கோட் : முதல் நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை

0
101

தி கோட் படம் வெளியாகி  முதல் நாளில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது.

நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, நடிகை சினேகா உள்ளிட்ட பலர் நடித்து நேற்று வெளியான படம் தி-கோட். இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று இருப்பதுடன் மாபெரும் வசூல் சாதனையும் புரிந்துள்ளது. இப்படத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தில் புதிதாக ஏ.ஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது முக்கியமாக பார்க்கப்படுகிறது. 

தமிழகத்தில் 1000 தியேட்டர்களில் இந்தப்படம் வெளியாகி உள்ள நிலையில் கோட் படம் முதல்நாளில் ரூ.126.32 கோடி வசூலித்துள்ளதாக பட தயாரிப்பாளரான ஏஜிஎஸ் அர்ச்சனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூலும் 500 கோடியை தாண்டும் என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here