கோட் படத்தின் 3வது பாடலில் சம்பவம் பண்ணிய சுருதி.. யுவன் ஷங்கர் செய்த காரியத்தால் கடுப்பான வெங்கட் பிரபு

0
82

Goat 3rd Single: ஒரு விஷயத்துல முழுமையாக வெற்றி பெற்று விட்டால் அதை அப்படியே பிடித்து கொண்டு தொங்காமல் அடுத்த கட்ட லெவலில் காலடி எடுத்து வைத்து அதன் வெற்றியை பார்க்க வேண்டும். அப்படித்தான் விஜய், சினிமாவில் ஆட்டநாயகன் ஆகவும் வசூல் மன்னனாகவும் வெற்றி அடைந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மின்னிக்கொண்டு வருகிறார். தற்போது சினிமாவில் வெற்றி பெற்ற பிறகு அடுத்த படியாக அரசியலிலும் வெற்றி பெற வேண்டும் என்று தமிழக வெற்றி கழகத்தின் கட்சியை தொடங்கியிருக்கிறார்.

அந்த வகையில் கமிட்டாகி இருக்கும் 2 படத்தை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்கப் போகிறார். இதற்கிடையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள கோட் படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் அனைத்தும் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி எல்லா திரையரங்குகளிலும் வெளியாக இருக்கிறது.

விஜய் பாடலில் புகுந்து விளையாடிய சுருதி

மேலும் விஜய் இனிமேல் நடிக்க மாட்டார் என்று தெரிந்த நிலையில் GOAT படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பை வைத்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படத்தில் இருந்து வெளிவந்த 2 பாடல்களுமே வழக்கமாக விஜய் பாடல்களுக்கு கிடைக்கும் வரவேற்பை காட்டிலும் குறைவாகத்தான் தான் கிடைத்திருக்கிறது. அதனால் தான் படம் எப்படி இருக்குமோ என்ற ஒரு சந்தேகமும் ரசிகர்கள் மனதில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இப்படத்தில் இருந்து 3 வது சிங்கிள் பாடல்கள் வெளியாக போவதாக தயாரிப்பாளர் AGS நிறுவனம் இணையதளத்தில் ஒரு பதிவு செய்திருந்தார்கள். அந்த வகையில் இந்த வார இறுதிக்குள் 3 வது சிங்கிள் பாடல் வெளியாகிவிடும். இந்த பாடலில் விஜய் மற்றும் திரிஷா ஆடிய நடனம் இருக்கிறது. இந்த 3 வது சிங்கிள் பாடலை சுருதிஹாசன் தான் பாடியிருக்கிறார்.

ஏற்கனவே வந்த 2 பாடல்களை விட சுருதிஹாசன் பாடிய பாடல் நிச்சயம் சம்பவம் செய்ய போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடலுக்கு “ஸ்பார்க்” என்னும் பெயர் சூட்டியிருக்கிறார்கள். அந்த வகையில் விசில் போடு பாடலுக்கு டஃப் தரும் வகையில் தூக்கலாக இருக்கப் போகிறது. சும்மாவே சுருதிஹாசன் பாடும் பாடல் ஹைப்பை உண்டாக்கும் அளவிற்கு எனர்ஜிடீக்காக இருக்கும்.

அதிலும் விஜய் ஆடும் பாடல் என்றால் சும்மா கேட்கவா வேணும், அதிரும்ல என்று சொல்வதற்கு தகுந்தது போல சுருதிஹாசன் அவருடைய பெஸ்ட்டை கொடுத்து இருக்கிறார். ஆனால் இந்த பாடலை இந்த வாரத்திற்குள் ரிலீஸ் செய்வதற்கு தயாராகிய நிலையில் யுவன் முடிக்க வேண்டிய பணிகளை எதுவும் முடிக்காமல் அசால்ட்டாக இருக்கிறார். யுவனின் செய்யும் செய்கையை பார்த்து செம கடுப்பில் இருக்கிறார் வெங்கட் பிரபு. எப்படியாவது இந்த வாரத்திற்குள் ரிலீஸ்செய்ய வேண்டும் என்பதால் தம்பிக்கு நெருக்கடி கொடுத்து கொண்டு வருகிறார் வெங்கட் பிரபு.

மேலும் கோட் படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருப்பதால் இப்படத்தின் சிறப்பு காட்சியை வெளியிடுவதற்கு முன்னதாக இங்கிலாந்தில் திரையிட போகிறார்கள். இங்கிலாந்தில் GOAT படத்தை வெளியிடும் ‘ahimsa entertainment’ நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. அஜித்திற்கு மங்காத்தா படம், சிம்புக்கு மாநாடு படம் போன்று விஜய்க்கும் கோட் படம் வெற்றியை தரும் என்று ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here