ஆசை ஆசையாய் வாங்கின காரை விற்கும் விஜய்.. சின்ன கீறல் கூட இல்லாமலிருக்கும் காரின் விலை என்ன தெரியுமா.?

0
51

Vijay: விஜய்க்கு புதுசு புதுசாக லேட்டஸ்ட் மாடல் கார்கள் வாங்குவது என்றால் அவருக்கு அவ்வளவு பிடிக்கும். இவரிடம் BMW, மினி கூப்பர், இன்னோவா, ஆடி, டொயோட்டா என ரக ரகமான Carகள் இருக்கின்றன. இதன் விலை மட்டுமே பல கோடி ரூபாய்களை தாண்டும்.

ஆனாலும் அவரிடம் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் Car அவருக்கு மிகவும் ஸ்பெஷல் ஆன ஒன்று. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி பண்ணிய இந்த கார் அவருக்கு ஆரம்பத்திலேயே பஞ்சாயத்தை தான் கொண்டு வந்தது.

அந்த காருக்கு நுழைவு வரி கட்ட வில்லை என தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். இப்படி சர்ச்சையை எழுப்பிய அந்த Car தான் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தக் காரை மட்டும் தானே ஓட்டும் விஜய் பீஸ்ட் ஷூட்டிங்கின் போது நெல்சன் உட்பட எல்லோரையும் அழைத்துக் கொண்டு ஜாலியாக ஒரு ரவுண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த Car தற்போது எம்பயர் ஆட்டோஸ் என்னும் டீலர்ஷிப்பில் விற்பனைக்காக வந்திருக்கிறது.

விற்பனைக்கு வந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்

அந்த வலைதள பக்கத்தில் விஜயின் Car அனைத்து கோணங்களிலும் படம்பிடித்து அதன் முழு விவரங்களுடன் செய்தியாக வெளியாகி இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் அந்த காரில் சின்ன கீறல் கூட கிடையாது.

புத்தம் புதுசு போல் இருக்கும் அந்தக் Car சர்வீஸ் செய்து நன்றாக ஓடும் நிலையில் இருக்கிறது. இதன் ஓடோமீட்டர் ரீடிங் 22,000 கி.மீ. Car ன் அனைத்து எலக்ட்ரானிக் அம்சங்கள் அனைத்தும் பக்காவாக இருக்கிறது.

அதன்படி இந்த காரின் விலை 2.6 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த விலை வேண்டுமானால் குறைக்கப்படும். 2012 ல் விஜய் இந்த காரை வாங்கிய போது இதன் விலை 3.5 கோடி ஆகும். இப்படியாக விஜய் பொத்தி பொத்தி பாதுகாத்து வைத்திருந்த இந்த காரை தற்போது விற்பனைக்கு விட்டுள்ளார்.

மேலே குறிப்பிட்ட விற்பனை தொகையை தாண்டி எக்ஸ்ட்ராவாக பணம் கட்ட தேவையில்லை எனவும் அந்த அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் வைரலாகி வரும் நிலையில் விஜய்யின் இந்த காரை யார் வாங்க போகிறார்கள் என்பதும் சர்ப்ரைசாக உள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here