Top 10 Hero’s Asset: பொதுவாக சினிமாவில் கதாநாயகிகளை விட ஹீரோக்கள் தான் கூடுதலாக சம்பளம் வாங்கிக் கொண்டு கோடி கணக்கில் சொத்துக்களை குவித்து கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் இஷ்டப்பட்ட போல ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வருகிறார்கள். ஆனால் முன்பெல்லாம் அதிகப்படியான சம்பளமே 10 கோடி 20 கோடி வரையில் தான் இருந்தது. தற்போது காலம் மாறி போக சம்பளமும் அதிகரித்து கொண்டே போகிறது என்று சொல்வதற்கு தகுந்தாற்போல பல மடங்கு கோடி சம்பளம் அதிகரித்து போனது.
அதிலும் எங்களுக்கு இந்த சம்பளம் தான் கொடுக்க வேண்டும் என்று டிமான்ட் செய்யும் அளவிற்கு கதாநாயகர்கள் வளர்ந்து விட்டார்கள். வேறு வழி இல்லாமல் தயாரிப்பாளர்களும் ஹீரோக்கள் கேட்க்கக்கூடிய சம்பளத்தை வாரி கொடுக்கிறார்கள். அப்படி பல நூறு கோடி சொத்துக்களை குவித்து வைத்துள்ள டாப் 10 ஹீரோக்களை குறித்து பார்க்கலாம்.
50 ஆண்டுகளாக நடித்தும் கமலின் சொத்து இவ்வளவுதானா?
கமல்ஹாசன்: கதாநாயகனாக சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக பயணித்து வரும் கமல் டைரக்டராகவும், தயாரிப்பாளராகவும் வெற்றி கண்டு வருகிறார். அந்த வகையில் இவருடைய சம்பளம் குறைந்தபட்சம் ஒரு படத்தில் 150 கோடி ரூபாய் வரை வாங்கி வருகிறார். மொத்தமாக இவர் வைத்து இருக்கும் சொத்து மதிப்பு 600 கோடி வரை இருக்கும் இவர் 10 வது இடத்தில் இருக்கிறார்.
அஜித்: ஒரு படத்திற்காக குறைந்தபட்சம் ஊதியமாக 100 கோடி முதல் 150 கோடி வரை சம்பளத்தை பெறுகிறார். மொத்தமாக இவரிடம் 750 கோடி அளவில் சொத்து மதிப்பு இருக்கிறது. அந்த வகையில் 9 வது இடத்தில் இருக்கிறார்.
பிரபாஸ்: இவர் நடிக்கக்கூடிய படங்கள் எல்லாம் பல கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டத்தை உண்டாகும் வகையாக தான் இருக்கிறது. இவர் நடிக்க வாங்கும் சம்பளம் 150 கோடி முதல் 200 கோடி வரை. அந்த வகையில் மொத்தமாக இவரிடம்இருக்கும் சொத்து மதிப்பு 900 கோடி ரூபாய் இருக்கிறது. இவர் 8 வது இடத்தை பெற்றிருக்கிறார்.

அல்லு அர்ஜுன்: தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு சுமார் 1200 கோடி வரை இருக்கும். அந்த வகையில் இவருடைய ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக 150 கோடியே பெற்று 7 வது இடத்தில் இருக்கிறார்.
ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்து கொண்டுள்ள ரஜினியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5200 கோடி. இவர் ஒரு படத்திற்கு 150 கோடி முதல் 200 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார். இவர் பணக்கார பட்டியலில் 6 வது இடத்தில் இருக்கிறார்.
விஜய்: கலெக்சன் மன்னனாகவும் ஆட்டநாயகனாகவும் ஜொலித்து கொண்டிருக்கும் விஜய் தற்போது வரை ஒரு படத்திற்கு 200 கோடி வரை சம்பளத்தை பெற்று 5வது இடத்தில் இருக்கிறார். அந்த வகையில் இவரிடம் ஏறத்தாழ 3600 கோடி சொத்து மதிப்பு இருக்கிறது.
அமீர்கான்: இவரின் சொத்து மதிப்பு 1892 கோடி. ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் ரூ. 200 கோடி . இவர் 4 வது இடத்தில் இருக்கிறார்.
அக்ஷய் குமார்: இவரின் மொத்த சொத்து மதிப்பு 2500 கோடி வரை இருக்கிறது. இவர் ஒரு படத்திற்கென்று 150 கோடி வரை சம்பளத்தை பெறுகிறார். தற்போது சொத்துக்களை வாங்கி குவித்து வைத்திருக்கும் டாப் இடத்தில் 3 வது இடத்தை பிடித்திருக்கிறார்.
சல்மான் கான்: இவரின் சொத்தின் மொத்த மதிப்பு 2900 கோடி வரை இருக்கிறது. ஒரு படத்திற்காக சம்பளமாக 220 கோடி வரை வாங்கி வருகிறார். அந்த வகையில் டாப் பணக்காரர்கள் லிஸ்டில் 2 வது இடத்தில் இருக்கிறார்.
ஷாருக்கான்: எட்டாத உயரத்தில் உச்சாணிக்கொம்பின் மேல் இருக்கிறவர் தான் ஷாருக்கான். இவருடைய மொத்த சொத்து மதிப்பு 6300 கோடி ரூபாய் வரை இருக்கிறது. இவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக 150 கோடி முதல் 250 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்குகிறார். அதனால் தான் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here