2026 தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் வரலாறு படைக்கும் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் தொடங்கியது. சுமார் 300 தொண்டர்கள் அரங்கிற்குள் அமர்ந்திருக்க த.வெ.க. தலைவர் விஜய் மாஸாக என்ட்ரி கொடுத்தார்.
விழா மேடைக்கு வந்த விஜய்க்கு தொண்டர்கள் ஆரவாரம் செய்து வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா தொடங்கியது.
முதலில் விழா மேடைக்கு வந்த விஜய்க்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பின்னர் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து விழா மேடையில் விஜய் அவர்கள் அவர்கள் தனது அரசியல் பேச்சை பேச ஆரம்பித்தார்.


இந்த நிகழ்வில் விஜய் பேசுகையில், “1967, 1977 ஆம் ஆண்டு தேர்தலைப் போல நாங்கள் மாற்றத்தை உருவாக்கப் போகிறோம். ஒருவர் கட்சி ஆரம்பித்தால் எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். நாங்கள் எதிர்ப்புகளை இடது கையில் கையாண்டு இருக்கிறோம்.
நம்மளுடைய கட்சி ஒன்றும் பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது. இது எளிய மக்களுக்கான கட்சி. நாட்டின் வளர்ச்சியைப் பற்றியோ.. மக்களின் வளர்ச்சியைப் பற்றியோ இந்த பண்ணையார்களுக்கு அக்கரை கிடையாது.
விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப் போகிறோம். தமிழக வெற்றிக் கழகம் முதன்மை சக்தி என அனைவருக்கும் காட்டுவோம். புதிய பிரச்னை ஒன்று கிளப்பி விட்டிருக்கிறார்கள். மும்மொழிக் கொள்கை.. இந்தத் திட்டத்தை இங்கே செயல் படுத்தவில்லை என்றால் நிதி தர மாட்டேன் எனக் கூறுகின்றனர்.
நாட்டில் இவ்வளவு பிரச்னைகள் இருக்கும்போது ஹேஷ் டேக் போட்டு விளையாடி கொண்டிருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here