Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

சர்ச்சை நாயகி வனிதாவுக்கு மீண்டும் கல்யாணம் : நடன இயக்குநர் ராபர்ட் உடன் வாழ்க்கையில் இணைகிறார்

ஏற்கனவே 4முறை திருமணம் செய்து, 4 முறை கணவர்மார்களை பிரிந்துள்ளார் நடிகை வனிதா. தற்போது அவர் மீண்டும் கல்யாணம் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது…

ஏற்கனவே 4முறை திருமணம் செய்து, 4 முறை கணவர்மார்களை பிரிந்துள்ளார் நடிகை வனிதா. தற்போது அவர் மீண்டும் கல்யாணம் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 

யார் இந்த வனிதா?

விஜயகுமாரின் மகளான வனிதா கோலிவுட்டில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர். விஜய்யுடன் சந்திரலேகா படத்திலும் நடித்தார். அதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் பிக்பாஸில் கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் பிரபல்யம் ஆகிவிடலாம் என்ற விதியின்படி வனிதாவும் தமிழ்நாடு முழுக்க மேலும் ஃபேமஸ் ஆனார். பிக்பாஸ் டைட்டிலை அவர் வெல்லாவிட்டாலும் போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு படவாய்ப்புகள் குவிந்துவருகின்றன. இதுவரை 17 படங்களில் நடித்திருப்பதாக கூறுகிறார் வனிதா.

Advertisements

இந்நிலையில், சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது கடற்கரை ஒன்றில் நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டரின் கையை காதலோடு பிடித்தபடி அமர்ந்திருக்கிறார் வனிதா விஜயகுமார். அதில் “Save The Date October 5” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனைப் பார்த்த ரசிகர்களோ அக்டோபர் 5ஆம் தேதி என்னவாக இருக்கும். ஒருவேளை இரண்டு பேருக்கும் திருமணமா? அல்லது இருவரும் இணைந்து நடிக்கும் படத்தின் ப்ரோமோஷனா? என்று ரசிகர்கள் தான் குழம்பி போய் உள்ளனர். 

நடிகை வனிதாவின் 4வது திருமணத்தின் போதும் நிறைய மீடியாகள், நியூஸ் சேனல்கள் இவரின் திருமணம் பற்றி வீடியோக்கள் வெளியிட்டு, அதைப்பற்றி பேசி உள்ளது குறிப்பிடத்ததக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here