அரசியல் களத்தில் விஜய் : தயாரானது விக்கரவாண்டியில் முதல் மாநாடு

0
68

நடிகர் விஜய் அவர்கள் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாபெரும் மாநாடு விக்ரமாண்டியில் அடுத்த மாதம் 23ஆம் தேதி நடைபெறுவது உறுதியாகி உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் ஒரு பக்கம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமா பிரபலங்கள் சொந்தமாக அரசியல் கட்சி தொடங்கி பின்னர் காணாமல் போனது தமிழக அரசியல் வரலாறு. பாக்கியராஜ், கார்த்தி, சரத்குமார் என இந்த பட்டியலில் பல முன்னணி நடிகர்களும் உள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு திடீரென்று நடிகர் கமலஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சி தொடங்கினார். ஆரம்பத்தில் திமுகவையும், அதிமுகவையும் எதிர்த்த கமலஹாசன் அவர்கள் தற்போது திமுக உடன் கூட்டணி வைத்துள்ளது தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் வரலாறு

செப்.23 – மாநாடு :-

நடிகர் விஜய் அவர்கள் மறைமுகமாக அரசியலில் மெல்ல, மெல்ல நுழைந்து கொண்டு, தற்போது  தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியையும் தொடங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்தார். இதையடுத்து அடுத்த மாதம் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரமாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் மாபெரும் மாநாடு அதாவது முதல் மாநாட்டை நடத்த அக்கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது.

எஸ்.பி.யிடம் மனு

மாநாட்டுக்கு அனுமதி கோரி, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முதல் நடவடிக்கையாக முறைப்படி மனு ஒன்றை விஜய் அவர்களின் வலது கரமான புஸ்சி ஆனந்த் அளித்துள்ளார். அவர் மனு கொடுக்கச் சென்ற போது எஸ்.பி அங்கு இல்லை. இதனால் ஏ.டி.எஸ்.பி, திருமாலிடம் மனு அளித்துள்ளார்.

மனுவில் கூறப்பட்டுள்ளது என்ன?

செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டி சாலையில் உள்ள கிராமத்தில் மாநாடு நடத்த அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும். 85 ஏக்கரில் மாநாடு நடத்துவதற்கான இடமும், வலது, இடது புறங்களில் வாகனங்களில் நிறுத்துவதற்கான இடமும் வாடகைக்கு எடுக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. எனவே முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here