ஐஸ்வர்யாராயுடன் நடிக்க விரும்பிய விஜய்.. தளபதியை ரிஜெக்ட் பண்ண உலக அழகி சொல்லிய அந்த ஒரு காரணம்

0
98

Thalapathy Vijay: நடிகர் விஜய்க்கு தற்போது இருக்கும் புகழுக்கு எத்தனையோ நடிகைகள் நான் நீ என போட்டி போட்டுக் கொண்டு அவருடன் நடிக்க காத்திருக்கிறார்கள். விஜய்க்கு தங்கச்சி கதாபாத்திரத்திலாவது நடித்து விட வேண்டும் என விருப்பப்பட்ட நடிகைகளும் உண்டு.

ஆனால் விஜய் நடிக்க ஆசைப்பட்ட நடிகை குறித்து பிரபல ஜெனலிஸ்ட் சவிதா ஜோசப் சொல்லி இருக்கிறார். நடிகர் விஜய் ரொம்பவே நடிக்க விருப்பப்பட்ட நடிகை ஐஸ்வர்யா ராய் தான். ஆனால் தமிழில் அந்த காலகட்டத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்தது பிரசாந்த் மற்றும் அப்பாஸ் தான்.

அதன் பின்னர் பல ஆண்டுகளாக ஐஸ்வர்யா ராய் தமிழ் சினிமா திசைக்கே தலை காட்டவில்லை. அதன் பின்னர் அவரை மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் அழைத்து வந்தது இயக்குனர் சங்கர் தான். சூப்பர் ஸ்டார் ரஜினியின் பல கால ஆசையை எந்திரன் திரைப்படத்தின் மூலம் தீர்த்து வைத்தார்.

தளபதியை ரிஜெக்ட் பண்ணிய உலக அழகி கூறிய அந்த ஒரு காரணம்
ஐஸ்வர்யா ராயுடன் எப்படியாவது நடித்தாக வேண்டும் என விஜய்க்கும் நீண்ட நாள் ஆசை இருந்திருக்கிறது. அவர் நடித்த தமிழன் படத்தில் ஐஸ்வர்யாராய் நடிப்பதற்கு பேச்சுவார்த்தையும் நடைபெற்று இருக்கிறது. விஜய் இடம் ஐஸ்வர்யா ராயை அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்கிறேன் என்று சொல்லி தான் சம்மதம் பெற்று இருக்கிறார்.

ஆனால் நான் விஜய் உடன் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டாராம் ஐஸ்வர்யா ராய். அதற்கு முக்கிய காரணம் விஜய் தன்னைவிட சின்னப் பையனாக திரையில் தெரிவார் என்பது தான்.

அதன் பின்னர் ஒரு வழியாக விஜய் இடம் எடுத்து சொல்லி அந்த உலக அழகி இல்லனா என்ன, அண்மையில் வெற்றி பெற்ற உலக அழகியை நடிக்க வைக்கிறேன் என்று சொல்லி பிரியங்கா சோப்ராவை அந்த படத்தில் நடிக்க வைத்து இருக்கிறார்கள்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here