தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஷால், ஹைதராபாத்தில் தன் திருமணத்தை குறித்து கொடுத்துள்ள பேட்டி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் பிரபலமான ஜி.கே.ரெட்டியின் 2 வது மகன் ஆவார். விஷால் சினிமாவில் நடிகர் ஆவதற்கு முன்னால் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதன் பின் இவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் ‘செல்லமே’.
அதன் பின் நடிகர் விஷால் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மேலும், இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பொதுச் செயலாளராகவும், திரைப்பட நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார். இந்த வருடம் நடந்த நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் அணி தான் மீண்டும் வெற்றி பெற்றது. அதோடு தமிழ் சினிமாவில் ‘புரட்சித் தளபதி’ என்று அழைக்கப்படுகின்ற விஷால் இப்போது படங்களில் அதிக கவனம் செலுத்தி கொண்டிருகிறார்.

விஷால் நடித்த படம் :
அந்த வகையில் விஷால் நடிப்பில் சமீபத்தில் ரிலீசான படம் ‘ரத்னம்’. இயக்குனர் ஹரி இந்த படத்தை இயக்கியிருந்தார். ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் யோகி பாபுமற்றும் பல நடிகர்கள் நடித்திருந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தன.
விஷாலின் காதல் விவகாரம்:
இப்படி பிஸியாக இவர் படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் இன்னும் திருமணம் ஆகாதது ஏன் என விஷாலிடம் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை கல்யாணம் எப்போது?’ என்று கேட்டவாறு இருகிறார்கள். அது மட்டுமில்லாமல் சில வருடங்களுக்கு முன்பு விஷால், அனிஷா என்பவரை காதலித்து நிச்சயதார்த்தமும் நடந்த நிலையில் கல்யாணம் நடைபெறவில்லை. அதேபோல் லட்சுமி மேனன் மற்றும் வரலட்சுமியுடனும் காதல் கிசுகிசுவில் கூட சிக்கி இருந்தார் விஷால்.
திருமணம் குறித்து விஷால்:
தற்போது 46 வயது நடக்கும் நிலையில், நடிகர் சங்கம் கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு பின்னர் தான் கல்யாணம் என்று அவர் உறுதியுடன் உள்ளதாக திருமணம் பேட்டிகளில் சொல்லியிருந்தார். அதேபோல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றிலும் தனது கடமைகளை அனைத்தும் முடித்த பிறகு தான் திருமணம் என்றும் பேசியிருந்தார். இப்போது விஷால் ஹைதராபாத்தில் கொடுத்த பேட்டியில், ‘இந்த 3 நடிகர்களுக்கு திருமணம் ஆன பிறகு தான் எனக்கு திருமணம்’ என்று கூறி பரப்பரப்பைஉண்டாக்கியுள்ளார்.
திருமணம் நடக்குமா என்ற சந்தேகம்:
அதேபோல், அவர் குறிப்பிட்ட அந்த 3 நடிகர்கள் சிம்பு, சல்மான் கான் மற்றும் பிரபாஸ் ஆகும். மேலும் 58 வயது ஆகும் சல்மான் கானுக்கு இனி திருமணமாக வாய்ப்பே இல்லை எனவும், 41 வயதாகும் சிம்புவிற்கு அவரது வீட்டில் பெண் பார்த்துக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. இதேபோல் 44 வயது ஆகும் பிரபாஸ், சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் தனது வாழ்க்கையில் ஒரு புதிய உறவு வர போகிறது என்று சொல்லியிருப்பதை அடுத்து அவரது திருமணம் கூடிய விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மேற்கொண்ட மூன்று நடிகைகளை விஷால் குறிப்பிட்டுள்ளதால் அவரது திருமணம் நடக்குமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here