Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

இனி கோயில் பூஜைகளில் அரளி பூக்களை உபயோகிக்க கூடாது.. அரசு போட்ட அதிரடி உத்தரவு!

கோயில் பூஜைகளில் அரளி பூக்களை உபயோகிக்க கேரள அரசு தடை வித்தித்துள்ளது. கேரளா மாநிலத்தில் சுமார் 2,500-க்கும் மேல் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் பூஜைசெய்தாலும் அல்லது…

கோயில் பூஜைகளில் அரளி பூக்களை உபயோகிக்க கேரள அரசு தடை வித்தித்துள்ளது.

கேரளா மாநிலத்தில் சுமார் 2,500-க்கும் மேல் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் பூஜைசெய்தாலும் அல்லது சாமி சிலைகளுக்கு மாலை அணிவித்தாலும் அரளி பூக்களை பயன்படுத்தக்கூடாது என அரசு தடை வித்தித்து இருக்கிறது.

Why was Arali banned
Why was Arali banned

ஏன் அரளி தடை செய்யப்பட்டது ?

கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி கேரளாவில் 24 வயது சூரியா சுரேந்திரன் என்கிற செவிலியர் மரணமடைந்தார். இவரது உயிரிழப்பிற்கான காரணத்தை ஆராய்ந்த போது அதற்கான காரணம் அரளி பூ என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

சூரியாவிற்கு லண்டனில் வேலை கிடைத்திருந்தது. அதன்படி அவர் ஏப்ரல் 28 ஆம் தேதி லண்டனுக்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது செல்போன் அழைப்பு வந்துள்ளது, சூரியா அந்த போனை எடுத்து பேசிக்கொண்டே அவர் வீட்டின் முன்பு இருந்த அரளி செடியில் பூத்திருந்த ஒரு பூவை பறித்து விளையாட்டு தனமாக வாயில் போட்டுள்ளார்.

அதன் பிறகு வாந்தி, மயக்கம் என சூரியாவின் உடல்நிலை மோசமாகிக்கொண்டே போயிருக்கிறது. இதனால் அவர் கொச்சி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார்.

Advertisements

சூரியா மரணமடைவதற்கு முன்பு மருத்துவர்களிடம் தான் அரளி பூ மற்றும் அதன் இலைகளை வாயில் போட்டு மென்றேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் அவர் உயிரிழந்த பின் அவரது உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் அவர், அரளி பூ விஷத்தால் மரணமடைந்ததாக அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளனர்.

ஆயுர்வேத மருத்துவத்தில் அரளி பூ உபயோகப்படுத்தப்பட்டாலும் அது மிகவும் விஷ தன்மை கொண்டது என உலக நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. எரிந்த அரளி பூவின் புகையை சுவாசித்தாலும் அது விஷமாக மாற வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எனவே கேரள அரசு கோயில்களில் அரளி பூக்களை உபயோகப்படுத்த தடை வித்தித்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here

Related Latest News