குற்றவாளிகளுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுக்கிறதா? நடிகர் மோகன் படங்கள்!

0
215

1984 ஆம் வருடம் நடிகர்கள் மோகன், விஜயகாந்த், சத்யராஜ், நளினி மற்றும் பலர் நடித்து, மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த படம் நூறாவது நாள். இப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. இப்படம் ரிலீசான சில மாதங்கள் கழித்து சென்னையில் ஆட்டோ சங்கர் என்று சொல்லப்படுகிற ஒரு கொடூர கொலைகாரன் கைது செய்யப்பட்டான். அந்த ஆட்டோ சங்கர் செய்த கொலைகள் சீரியல் கில்லிங் என குறிப்பிடப்பட்டு வந்தது.

ஆட்டோ சங்கர் கொலை செய்த முறை ‘நூறாவது நாள்’ திரைப்படத்தில் நடந்தது போல வைத்து, அவர் பின்பற்றியதாக கூறப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்பு சென்னை பெரம்பூரில் வசித்து கொண்டிருந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை குறித்து விசாரிக்கையில், அவரை கொலை செய்த நபர்கள் உணவு விநியோகம் (ஃபுட் டெலிவரி) செய்யும் நபர்கள் போல் உடை அணிந்து வந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1980 காலகட்டத்தில் தமிழ் திரையில் கோலூன்றி வந்த முன்னணி நடிகர்களில் மோகனும் ஒருவர். 1977 ஆம் வருடம் ‘கோகிலா’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான மோகன், 1980 ஆம் வருடம் ‘மூடு பனி’ திரைப்படம் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானார்.இவர் இதுவரை சுமார் 100 படங்களுக்கு மேல் கடந்து கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பன்மொழி படங்களில் நடித்து வந்தார். தமிழில் ‘சுட்ட பழம்’ என்னும் திரைப்படத்தில் 2008 ஆம் வருடம் நடித்து தோல்வியை சந்தித்தார் மோகன். சுமார் 16 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் ‘ஹரா’ என்னும் திரைப்படத்தின் வாயிலாக ரீ-என்ட்ரி கொடுத்தார். சாரு ஹாசனை ஹீரோவாக வைத்து ‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி, ‘ஹரா’ என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் மோகனுக்கு மீண்டும் ஹீரோவாக ரி-என்ட்ரி கொடுத்தார்.

விஷயம் என்னவென்றால் ‘ஹரா’ திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ மோகன் உணவு விநியோகம் (ஃபுட் டெலிவரி) செய்பவரைப் போல் வேஷமிட்டு, வில்லன் இடத்திற்குள்ளே நுழைந்து, வில்லன் சுரேஷ் மேனனை தாக்குவார். அண்மையில் நடந்த ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கை பார்க்கும் போது, கொலை செய்தவர்கள் மோகன் நடித்த ‘ஹரா’ திரைப்படத்தை பார்த்து விட்டு மோகனைப் போல் அவர்களும் உணவு விநியோகம்(ஃபுட் டெலிவரி) செய்பவர்களைப் போல் வேஷமிட்டு வந்து ஆர்ம்ஸ்டாங்கை கொலை செய்ய ஈடுபட்டார்களோ என தோன்றுகிறது.

இதைப் பார்க்கும்போது, மோகனின் ‘நூறாவது நாள்’ மற்றும் ‘ஹரா’ ஆகிய 2 திரைப்படங்களும் கொலைகாரர்களுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுக்க உதவி உள்ளதாகவே தெரிகிறது

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here