Aranthai Nisha : சின்னத்திரை நடிகை அறந்தாங்கி நிஷா வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது… விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யார் நிகழ்ச்சியின் மூலமாக தனது திறமையால் பல ஆண் போட்டிகள் அவர்களுக்கு மத்தியிலும் தன்னுடைய சிறப்பான நகைச்சுவை திறனால் ஜொலித்தவர் தான் அறந்தாங்கி நிஷா…
தற்போது சின்னத்திரை மட்டுமல்லாது வெள்ளித்திரையிலும் மாஸ் காட்டி வருகிறார்… இவர் சினிமாவில் பெரிய அளவில் முன்னேற தூணாக இருந்தது அவரது கணவர் ரியாஸ் மற்றும் மகனும் மகளும் தான் என பல மேடைகளில் கூறியிருக்கிறார்…

Viral video released by Aranthangi Nisha
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அறந்தாங்கி நிஷா சமீபத்தில் ஒரு பதிவை பதிவு செய்திருக்கிறார் அதில் ஒரு நிகழ்ச்சிக்காக மதுரைக்கு சென்று கொண்டிருக்கும் போது அருமை சகோதரர் இவர் பெயர் கண்ணன் எல்லா ஆண்களும் தன்னுடைய குடும்பத்திற்காக என்ன வெயில் வந்தாலும் என்ன மழை வந்தாலும் எல்லாவற்றையும் தாண்டி தன்னை நம்பி இருக்கக்கூடிய குடும்பத்திற்காகவும் பிள்ளைகளுக்காகவும் உழைப்பதை பார்க்கும் போது அவர்கள் மேல் எப்பொழுதுமே மரியாதை போடும் இந்த சகோதரர் ஒரு மாற்றுத்திறனாளி இந்த வெயிலை கூட பொருட்படுத்தாமல் குடும்பத்திற்காக உழைப்பதை பார்க்கும் போது நான் அவ்வப்போது வேலை கஷ்டமாக இருக்கிறது என்று சொல்வேன் இனி சத்தியமாக நான் இனி ஒருபோதும் அப்படி சொல்ல மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார்
அதன்பிறகு உனக்கு சகோதரியாக ஒன்றை ஒன்று கேட்கிறேன் ஒருவேளை நாம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால் தயவுசெய்து தன்னைப் பெற்ற பெற்றோர்களுக்கு ஓய்வு கொடுப்போம் என பதிவிட்டுள்ளார்…
இந்த வீடியோ தற்போது வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here